இந்தியா

மாருதி நிறுவனத்தில் இருந்து இப்படி ஒரு காரா? மோசமான விபத்தில் இருந்து 5 பேரை பாதுகாத்த BREEZA !

சாலை விபத்தில் பிரெஸ்ஸா காரில் பயணம் செய்துகொண்டிருந்த கும்பத்தினரில் யாருக்கும் சிறிய அடி கூட படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாருதி நிறுவனத்தில் இருந்து இப்படி ஒரு காரா? மோசமான விபத்தில் இருந்து 5 பேரை பாதுகாத்த BREEZA !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த பல மாதங்களாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராக விளங்கிவந்த டாடா நெக்ஸானை முந்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிறந்த விற்பனை எஸ்யூவியாக முதலிடத்திற்கு வந்தது.

இதற்கு காரணம் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் பாதுகாப்பானது எனவும், குடும்பத்தினருடன் பயணம் செய்ய ஏற்றது எனவும் கூறப்பட்டதே ஆகும். இந்த நிலையில், அதனை மெய்ப்பிக்கும் விதமாக நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

மாருதி நிறுவனத்தில் இருந்து இப்படி ஒரு காரா? மோசமான விபத்தில் இருந்து 5 பேரை பாதுகாத்த BREEZA !

சிம்லா நெடுஞ்சாலையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஒரு குடும்பத்தினர் பயணம் செய்து வந்துள்ளனர். அப்போது பிரெஸ்ஸா கார் சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் எதிரே வந்துகொண்டிருந்த ட்ரக் ஒன்றின் மேல் மோதியுள்ளது.

இந்த விபத்தில், பிரெஸ்ஸா காரில் பயணம் செய்துகொண்டிருந்த கும்பத்தினரில் யாருக்கும் சிறிய அடி கூட படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் பாதுகாப்புகள் குறித்தும், விபத்தில் யாருக்கும் அடிபடாத நிகழ்வு குறித்தும் பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories