இந்தியா

சிறிய தவறால் வீணாய் போன 20 வருட அனுபவம்.. ராஜநாகத்தால் பாம்பு மனிதருக்கு நேர்ந்த சோகம் !

பாம்பு மனிதர் என்று பிரபலமாக அறியப்படும் ஒருவர் ராஜநாகம் கடித்து இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறிய தவறால் வீணாய் போன 20 வருட அனுபவம்.. ராஜநாகத்தால் பாம்பு மனிதருக்கு நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் திவாரி (வயது 45) என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழிலைச் செய்து வருகிறார். இதன் காரணமாக அந்த பகுதியில் மிகவும் பிரபலமானவராகவும் அவர் இருந்து வந்தார்.

இவருக்கு அந்த பகுதியில் இருக்கும் கொஹமெடி பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் மிக்பெரிய ராஜநாகம் ஒன்று புகுந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு சென்றவர் தனது அனுபவத்தின் வழியாக எளிதாக அந்த ராஜநாகத்தை பிடித்துள்ளார்.

பின்னர், அதனை தான் கொண்டுவந்த பைக்குள் அடைக்க வினோத் திவாரி முயன்றபோது எதிர்பாராத விதமாக ராஜநாகம் அவரை கடித்துள்ளது. இதன் காரணமாக விஷம் அதிவேகமாக பரவியதால் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

பாம்பு மனிதர் என்று அனைவராலும் பிரபலமாக அறியப்படும் வினோத் திவாரி பாம்பு கடித்து இறந்துள்ளது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்றும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories