இந்தியா

உ.பி : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகள்..பெண்ணின் தாயை விசாரணைக்கு அழைத்து வன்கொடுமை செய்த காவல் ஆய்வாளர்!

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசாரணைக்கு வந்த பெண்ணின் தாயை காவல் ஆய்வாளரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

உ.பி : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகள்..பெண்ணின் தாயை விசாரணைக்கு அழைத்து வன்கொடுமை செய்த காவல் ஆய்வாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னூஜ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சதார் என்ற இடத்தில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சதார் காவல்நிலைய ஆய்வாளர் அனுப் மவுரியா என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்கு போன் செய்து வழக்கு தொடர்பாக சில ஆவணங்களில் கையெழுத்து போட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக பேச தனது குடியிருப்பு அருகில் இருக்கும் பெட்ரோல் நிலையத்துக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

உ.பி : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகள்..பெண்ணின் தாயை விசாரணைக்கு அழைத்து வன்கொடுமை செய்த காவல் ஆய்வாளர்!

அதன்படி அங்கு வந்த அந்த பெண்ணை தன் பின்னால் வரும்படி கூறியுள்ளார், பின்னர் அந்த பெண்ணை அழைத்து தனது வீட்டுக்கு சென்ற ஆய்வாளர் அங்கு வந்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் நடைபெற்ற விசாரணையில், அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் இது தொடர்பாக ஆய்வாளர் அனுப் மவுரியாவை கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசாரணைக்கு வந்த பெண்ணின் தாயை காவல் ஆய்வாளரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories