இந்தியா

COLLECTOR கண்ணாடியை ஆட்டைய போட்ட குரங்கு.. களத்தில் இறங்கிய 20 பேர் கொண்ட குழு.. உ.பி-யில் அதிர்ச்சி !

COLLECTOR-இடமிருந்து குரங்கு ஒன்று கண்ணாடியை எடுத்து சென்றது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

COLLECTOR கண்ணாடியை ஆட்டைய போட்ட குரங்கு..  களத்தில் இறங்கிய 20 பேர் கொண்ட குழு.. உ.பி-யில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் மாவட்ட ஆட்சியராக (COLLECTOR) இருப்பவர் நவ்நீத் சாஹல். இவர் நேற்று அம்மாவட்டத்திலுள்ள பிருந்தாவனம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த குரங்கு ஒன்று ஆட்சியர் கையில் வைத்திருந்த கண்ணாடியை பிடிங்கி சென்றுள்ளது.

COLLECTOR கண்ணாடியை ஆட்டைய போட்ட குரங்கு..  களத்தில் இறங்கிய 20 பேர் கொண்ட குழு.. உ.பி-யில் அதிர்ச்சி !

இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்சியர், காவல்துறையினர் என அனைவரும் அந்த குரங்கிடம் இருந்து கண்ணாடியை மீட்க அரும்பாடு பட்டனர். இதற்காக சுமார் 20 பேர் கொண்ட குழு குரங்கிடம் இருந்து ஆட்சியரின் கண்ணாடியை திரும்பி வாங்க வழியை தேடிக்கொண்டிருந்தது.

இருப்பினும் அந்த குரங்கு அவரது கண்ணாடியை கொடுக்காமல் ஒரு படிக்கட்டின் மேல் ஏறிக்கொண்டு தனது கையிலேயே வைத்துக்கொண்டிருந்தது.

இதையடுத்து உள்ளூர்வாசிகள் உதவியுடன், அந்த குரங்கிடம் இருந்து கண்ணாடியை மீட்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories