இந்தியா

ரூ.2,500 கோடி கொடுத்தால் பா.ஜ.கவில் முதல்வர் பதவி.. கர்நாடகாவில் மீண்டும் எழுந்த சர்ச்சை ! பின்னணி என்ன?

கர்நாடக பா.ஜ.கவில் முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது என காங்கிரஸ் எம்.எல்.சி குற்றம் சாட்டியுள்ளார்.

ரூ.2,500 கோடி கொடுத்தால் பா.ஜ.கவில் முதல்வர் பதவி..  கர்நாடகாவில் மீண்டும் எழுந்த சர்ச்சை ! பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். மேலும் பசவராஜ் பொம்மை முதல்வரானது காசு கொடுத்துதான் என்ற சர்ச்சையையும் எழுந்தது.

ரூ.2,500 கோடி கொடுத்தால் பா.ஜ.கவில் முதல்வர் பதவி..  கர்நாடகாவில் மீண்டும் எழுந்த சர்ச்சை ! பின்னணி என்ன?

இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் கர்நாடக பா.ஜ.க மூத்த எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால், ''ரூ. 2500 கோடி கொடுத்தால் முதல்வர் பதவி தருவதாக டெல்லி மேலிடத் தலைவர்கள் என்னிடம் பேரம் பேசினார்கள்'' என குற்றம்சாட்டினார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கர்நாட காங்கிரஸ் எம்.எல்.சி ஹரிபிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பா.ஜ.க.வில் நிறைய பேர் முதல்வராக ஆசைப்படுகிறார்கள். அரசியலில் இருந்து விலகி இருந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு பாஜக ஆட்சி மன்ற குழுவில் இடமளிக்கப்பட்டுள்ளதன் மூலம் வரும் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் ஆகிய இரண்டிலும் எடியூரப்பா முக்கிய பங்கு வகிப்பார் என்பது உறுதியாகிவிட்டது.

ரூ.2,500 கோடி கொடுத்தால் பா.ஜ.கவில் முதல்வர் பதவி..  கர்நாடகாவில் மீண்டும் எழுந்த சர்ச்சை ! பின்னணி என்ன?

இதனால் அவரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட வாய்ப்பு இருக்கிறது. பா.ஜ.கவை பொறுத்தவரை பணம் கொடுத்தால் பதவி கொடுப்பார்கள். முதல்வர் பதவி ரூ.2,500 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பா.ஜ.க தலைவர்கள் சிலரே பகிரங்கமாக கூறியுள்ளனர். அதனால் பசவராஜ் பொம்மையின் பதவி நிரந்தரம் இல்லை" என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கர்நாடகாவில் மீண்டும் முதல்வர் பதவி விற்பனை தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories