மு.க.ஸ்டாலின்

"எனக்கு கொரோனா வந்தபோது பெரிய பாதிப்பு வராததற்கு காரணம் உடற்பயிற்சிதான்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

எனக்கு கொரோனா வந்தபோது பெரிய பாதிப்பு வராமல் போனதற்கு காரணம் உடற்பயிற்சிதான் என "Happy Streets" நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

"எனக்கு கொரோனா வந்தபோது பெரிய பாதிப்பு வராததற்கு காரணம் உடற்பயிற்சிதான்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை போக்குவரத்து காவல் துறை மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி இணைந்து மோட்டார் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக, "Happy Streets" என்கிற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி குறிப்பிட்ட சாலைகளில் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை "Happy Streets" நிகழ்ச்சி நடைபெறும். இந்த சாலைகளில் 3 மணி நேரத்துக்கு முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் - நோக்கங்கள் தொடர்பான நடனம், பாட்டு, இசை நிகழ்ச்சிகள், இலவச வாடகை சைக்கிள் ரெய்டு, ஸ்கேட்டிங், சாக் ரேஸ், கயிறு இழுத்தல், கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், டார்ட் போர்டு போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்

"எனக்கு கொரோனா வந்தபோது பெரிய பாதிப்பு வராததற்கு காரணம் உடற்பயிற்சிதான்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் இன்று நடைபெறும் "Happy Streets" நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அங்கு வந்து சைக்கிள் ஊட்டிய முதல்வர் பின்னர் டேபிள் டென்னிஸ்,பாட்மிண்டன், பாஸ்கெட் பால் ஆகிய விளையாட்டுகளை விளையாடினார்.

அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எனக்கு கொரோனா வந்தபோது பெரிய பாதிப்பு வராமல் போனதற்கு காரணம் உடற்பயிற்சிதான். எனக்கு 70 வயது ஆனாலும் நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன்-தம்பி போலத்தான் இருப்போம். உடல்நலத்தை பேணிக்காத்தால் கவலைகள், மன சங்கடங்கள் நம்மைவிட்டு ஓடி போகும்.எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

banner

Related Stories

Related Stories