இந்தியா

"அவர் நிகழ்ச்சி நடத்தினால் அடிப்போம்" - பிரபல நகைச்சுவை நடிகரை மிரட்டிய பாஜக MLA ! காரணம் என்ன ?

நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபாரூக்கிக்கு தெலுங்கானா பா.ஜ.க எம்எல்ஏ மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"அவர் நிகழ்ச்சி நடத்தினால் அடிப்போம்" - பிரபல நகைச்சுவை நடிகரை மிரட்டிய பாஜக MLA ! காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பிரபல நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபாரூக்கி கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியின் போது ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். பல இடங்களில் பாஜகவினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரை கைதுசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைதான அவர் பின்னர் ஜாமின் பெற்று வெளியேவந்தார்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் அவர் செல்லும் இடமெல்லாம் பா.ஜ.க.வினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் முனாவர் ஃபாரூக்கி ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.

"அவர் நிகழ்ச்சி நடத்தினால் அடிப்போம்" - பிரபல நகைச்சுவை நடிகரை மிரட்டிய பாஜக MLA ! காரணம் என்ன ?

இதற்கு சமூகவலைத்தளத்தில் பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோசாமங்கள தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ டி.ராஜா சிங் நடிகர் முனாவர் ஃபாரூக்கிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கூறியுள்ள அவர், ''முனாவர் ஃபாரூக்கியின் நிகழ்ச்சி எங்கு நடந்தாலும், நாங்கள் அவரை அடிப்போம். அந்த இடத்திற்கு தீ வைப்போம். முனாவர் ஃபாரூக்கி தெலுங்கானாவுக்கு வந்தால் தகுந்த பாடம் கற்பிப்போம்" என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"அவர் நிகழ்ச்சி நடத்தினால் அடிப்போம்" - பிரபல நகைச்சுவை நடிகரை மிரட்டிய பாஜக MLA ! காரணம் என்ன ?

இவர் இதற்கு முன்னர் "நாடுவிரைவில் இந்து ராஷ்டிரமாக மாறும். ராமர் பெயரை உச்சரிக்காதவர்கள் பாரதத்தை விட்டு ஓட வேண்டும்" என்று கூறி சர்ச்சையில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தத்தக்கது.

banner

Related Stories

Related Stories