இந்தியா

வாட்ஸ்அப்பில் கிண்டல் செய்ததால் ஆத்திரம்.. இளைஞரை கொடூரமான தாக்கிய நபர் கைது.. கேரளாவில் பரபரப்பு !

வாட்ஸ்அப் குழுவில் கிண்டல் செய்த நபரை இளைஞர் ஒருவர் நேரில் வரவழைத்து தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப்பில் கிண்டல் செய்ததால் ஆத்திரம்.. இளைஞரை  கொடூரமான தாக்கிய நபர் கைது.. கேரளாவில் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ராகுல். இவரை அதே பகுதியை சேர்ந்த அச்சு என்ற இளைஞர் வாட்ஸ்அப் குழு ஊனில் கிண்டல் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராகுல், அச்சுவை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.

அதற்காக அச்சுவை தொடர்பு கொண்ட மிரட்டியுள்ள ராகுல் அவரை நேரில் வரச்சொல்லி இருக்கிறார். அதன்படி அச்சு கடந்த திங்கள்கிழமை நேரில் சென்று ராகுலை சந்தித்துள்ளார். அப்போது தன்னை அவமானப்படுத்தியதற்காக தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு ராகுல் கூறியுள்ளார்.

வாட்ஸ்அப்பில் கிண்டல் செய்ததால் ஆத்திரம்.. இளைஞரை  கொடூரமான தாக்கிய நபர் கைது.. கேரளாவில் பரபரப்பு !

சண்டையை முடிக்க விரும்பிய அச்சுவும், ராகுலின் காலில் விழ குனிந்துள்ளார். அப்போது அவர் மேல் கடும் ஆத்திரத்தில் இருந்த ராகுல் அச்சுவை சராமாரியாக அடித்து தாக்கியுள்ளார். இந்த காட்சியை ராகுலின் நண்பர்கள் விடியோவாக பதிவிட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைப் கொல்லம், கருநாகப்பள்ளி காவல்நிலைய போலிஸார் ராகுலை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள ராகுல், கொலை வழக்கு, பாலியல் பலாத்கார வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப்பில் கிண்டல் செய்ததால் ஆத்திரம்.. இளைஞரை  கொடூரமான தாக்கிய நபர் கைது.. கேரளாவில் பரபரப்பு !

தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் அச்சு தற்போது கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். கொடும் தாக்குதல் நடத்திய ராகுலுக்கு போலிஸார் உரிய தண்டனை பெற்றுத்தரவேண்டும் என அச்சுவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories