இந்தியா

மாணவர்களை பகுதிநேர கூலி தொழிலாளிகளாக்கிய அரசு பள்ளி.. வெளிவந்த வடமாநில அரசு பள்ளிகளின் அவலம் !

பீகார் அரசு பள்ளியில் மாணவர்களை பகுதி நேரமாக கூலி வேலை செய்ய பள்ளி கட்டாயப்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களை பகுதிநேர கூலி தொழிலாளிகளாக்கிய அரசு பள்ளி.. வெளிவந்த வடமாநில அரசு பள்ளிகளின் அவலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளி மாணவர்களை பாதி நேரம் மண் தோண்டுதல், செங்கற்கள் எடுத்து வருதல், மரம் வெட்டுதல் போன்ற வேலைகளை செய்ய வைப்பதாக குற்றசாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது.

இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கூலிவேலைகளை பள்ளியில் படிக்கும் குழந்தைகள் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களை பகுதிநேர கூலி தொழிலாளிகளாக்கிய அரசு பள்ளி.. வெளிவந்த வடமாநில அரசு பள்ளிகளின் அவலம் !

குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் வகையில், நடைபெற்ற இந்த சம்பவத்தை பலரும் இணையத்தில் கண்டித்து வருகின்றனர். மேலும் சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் ஜெகனாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் முன் வந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், இந்த சம்பவம் இதற்கு முன்னரும் நடந்துள்ளது என்றும், இப்போதுதான் அது வெளிவந்துள்ளது என்றும் கூறினார். மேலும், பள்ளியில் பராமரிப்பு மிகவும் மோசமாக இருப்பதாகவும், வருகை மிகக் குறைவாக இருப்பதாகவும் கூறினார்.

மேலும், பள்ளியில் கரும்பலகைகள் உடைக்கப்பட்டுள்ளன. தயாரிக்கப்படும் மதிய உணவுகளும் நன்றாக இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories