இந்தியா

ENGLISH பேச தெரியாத மாணவர்கள்.. சர்வதேச ஆங்கில மொழி தேர்வில் மோசடி.. சிக்கும் குஜராத் பயிற்சி மையங்கள்!

சர்வதேச ஆங்கில மொழி தேர்வில் வெற்றிபெற்றதாக போலி மதிப்பெண் அளித்து மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ENGLISH பேச தெரியாத மாணவர்கள்.. சர்வதேச ஆங்கில மொழி தேர்வில் மோசடி.. சிக்கும் குஜராத் பயிற்சி மையங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சர்வதேச ஆங்கில மொழி சோதனை அமைப்பு (IELTS) என்பது ஒரு தனிநபரின் ஆங்கில மொழித் திறனைச் சரிபார்க்க மிகவும் விரும்பப்படும் தரப்படுத்தப்பட்ட சோதனைகளில் ஒன்றாகும். இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் ஆங்கிலம் பேசும் நாடுகளில் வேலைவாய்ப்பு, மேற்படிப்பு போன்றவற்றில் முன்னுரிமை கிடைக்கும்.

இந்தியாவில் இருந்து அதிகம் மாணவர்கள் மற்றும் வேலை தேடுவோர் அமெரிக்கா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு செல்வதால் IELTS தேர்வில் வெற்றிபெற பல்வேறு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ENGLISH பேச தெரியாத மாணவர்கள்.. சர்வதேச ஆங்கில மொழி தேர்வில் மோசடி.. சிக்கும் குஜராத் பயிற்சி மையங்கள்!

இதில் பயிற்சி கட்டணமாக அதிக தொகை வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அதே போல சில பயிற்சி மையங்கள் தேர்வில் வெற்றிபெற முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

குஜராத்தில் IELTS தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் அமெரிக்காவில் குடியிருந்து வருகிறார்கள். அப்படி சென்றவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தின் ஆங்கிலம் பேசத்திணறி வருவது இந்த தேர்வு குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ENGLISH பேச தெரியாத மாணவர்கள்.. சர்வதேச ஆங்கில மொழி தேர்வில் மோசடி.. சிக்கும் குஜராத் பயிற்சி மையங்கள்!

இதைத் தொடர்ந்து கனடாவிலிருந்து சிலர் அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக நுழைய முயன்றுள்ளனர். அப்போது அவர்களை கைது செய்து விசாரித்தபோது IELTS தேர்வில் பயிற்சி மையங்கள் முறைகேடு செய்து போலி மதிப்பெண்களை கொடுத்துள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.

இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவிலும் இந்த போலி மதிப்பெண் விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக குஜராத்தில் உள்ள IELTS பயிற்சி மையங்களில் குஜராத் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல பயிற்சி மையங்க சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories