இந்தியா

காதலுக்காக இரவு முழுவதும் பெண்கள் கழிவறையில் இருந்த நபர்.. இதுக்கெல்லாமா இப்படி செய்வார்கள்?

காதலி கேட்ட மொபைல்போனை திருட ஷோரூம் கழிவறையில் இரவு முழுவதும் இருந்த நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலுக்காக இரவு முழுவதும் பெண்கள் கழிவறையில் இருந்த நபர்.. இதுக்கெல்லாமா இப்படி செய்வார்கள்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பெங்களூருவின் ஜே.பி.நகர் பகுதியில் மிகப்பெரிய எலக்ட்ரானிக் ஷோரூம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு விலை உயர்ந்த செல்போன்களும் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் அப்துல் முனாஃப் என்ற இளைஞன் தனது காதலி கேட்ட விலை உயர்ந்த செல்போனை திருடுவதற்காக விபரீத யோசனையில் இறங்கியுள்ளார். அதன் படி மேற்கூறிய எலக்ட்ரானிக் ஷோரூம் மூடும் நேரத்தில் அதன் உள்ளே சென்ற அவர் பெண்கள் கழிவறையில் சென்று ஒழிந்துகொண்டுள்ளார்.

பின்னர் ஷோரூம் மூடப்பட்ட நிலையில், கழிவறையில் இருந்து வெளியே வந்த அவர், அங்குள்ள விலையுயர்ந்த 7 செல்போன்களை எடுத்துக்கொண்டு மீண்டும் அதே பெண்கள் கழிவறைக்குள் சென்று அங்கேயே தங்கியுள்ளார்.

காதலுக்காக இரவு முழுவதும் பெண்கள் கழிவறையில் இருந்த நபர்.. இதுக்கெல்லாமா இப்படி செய்வார்கள்?

பின் காலை ஷோரூம் திறந்த பின்னர் பெண்கள் கழிவறையில் இருந்து வெளிவந்த அவர், சாதாரணமாக வாடிக்கையாளர் போல ஷோரூமில் இருந்து வெளியேறியுள்ளார்.

அவர் வெளியே சென்றபோது அவர் திருடிய செல்போன்களில் ஒன்று ஷோரூமின் தரையில் கிடந்துள்ளது. அதைப் பார்த்த ஷோரூம் பணியாளர் ஒருவர் அதை சோதனை செய்தபோது அது தங்கள் ஷோரூமில் இருந்து திரட்டப்பட்டது என்பது தெரியவந்தது.

பின்னர், அங்கு இருந்த பிற செல்போன்களை சோதனை செய்தபோது 7 செல்போன்கள் திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காதலுக்காக இரவு முழுவதும் பெண்கள் கழிவறையில் இருந்த நபர்.. இதுக்கெல்லாமா இப்படி செய்வார்கள்?

பின்னர் காவல்துறையினர் போனின் IMEI நம்பரை வைத்து திருடப்பட்ட செல்ஃபோன் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து, திருட்டில் ஈடுபட்ட அப்துல் முனாஃபையும் கண்டுபிடித்தனர். அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அவர் பீகாரின் பூர்னே பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும் திருடிய போனில் ஒன்றை காதலியிடம் கொடுத்து மீதம் இருக்கும் போனை தான் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்த 5 லட்ச ரூபாய் மதிப்பிலான 6 மொபைல்போனை பறிமுதல் செய்த போலிஸார் அவரை சிறையில் அடைந்தனர்.

banner

Related Stories

Related Stories