இந்தியா

"இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டே சரிந்துவிட்டது.. இனி சரிய என்ன இருக்கு?" - சுப்பிரமணியன் சாமி கிண்டல் !

இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டே மந்த நிலையை சந்தித்துவிட்டது என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

"இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டே சரிந்துவிட்டது.. இனி சரிய என்ன இருக்கு?" - சுப்பிரமணியன் சாமி கிண்டல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.

தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. இதனால் இந்த பொருள்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டே சரிந்துவிட்டது.. இனி சரிய என்ன இருக்கு?" - சுப்பிரமணியன் சாமி கிண்டல் !

ஒன்றிய அரசின் இந்த முடிவிற்குக் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன. நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போதும் எதிர்க்கட்சிகள் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு போன்றவற்றை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திவந்தனர். இதனால் நாடாளுமன்றம் முடங்கியது. மேலும் 27 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போராடியதன் விளைவாக பின்னர் எம்.பிக்களை சஸ்பெண்ட் திரும்பபெறப்பட்டு விவாதத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி, ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்தார்.

"இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டே சரிந்துவிட்டது.. இனி சரிய என்ன இருக்கு?" - சுப்பிரமணியன் சாமி கிண்டல் !

இந்த விவாதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலகிலேயே அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின் வளர்ச்சி தொடர்கிறது. கொரோனா இடர்பாடுகளையும் கடந்து உலகின் பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது. பணவீக்கத்தை 7 சதவீதத்திற்குள் அரசு கட்டுப்படுத்தியுள்ளது. பொருளாதார மந்த நிலையோ, தேக்க நிலையோ ஏற்படும் என்ற கேள்விக்கே இடமில்லை" எனக் கூறினார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ.கவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியே நிர்மலா சீதாராமனை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிக்கொள்ளும் என்ற கேள்விக்கே இடமில்லை'' என்று மத்திய நிதியமைச்சர் கூறியதாக ஊடகங்கள் கூறியுள்ளன. அவர் சொல்வது சரிதான். ஏனென்றால் கடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்துவிட்டது. எனவே தற்போது இந்திய பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்வது குறித்த கேள்வி எழவே இல்லை '' எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories