இந்தியா

பற்றி எரிந்த தனியார் மருத்துவமனை.. 5 நோயாளிகள் உட்பட 8 பேர் பரிதாப பலி: ம.பி-யில் அதிர்ச்சி சம்பவம்!

மத்திய பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பற்றி எரிந்த தனியார் மருத்துவமனை.. 5 நோயாளிகள் உட்பட 8 பேர் பரிதாப பலி: ம.பி-யில் அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரின் தாமோ நாகா பகுதியில் நியூ லைஃப் மல்டி ஸ்பெஷாலிட்ட மருத்துவமனை உள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று திடீரென தீ பிடித்துள்ளது.

இதனால் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தீயில் சிக்கியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலிஸார் தீயில் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.

பற்றி எரிந்த தனியார் மருத்துவமனை.. 5 நோயாளிகள் உட்பட 8 பேர் பரிதாப பலி: ம.பி-யில் அதிர்ச்சி சம்பவம்!

இருப்பினும் இந்த தீ விபத்தில் 5 நோயாளிகள் மற்றும் 3 மருத்துவமனை ஊழியர்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளது. இந்த விபத்து குறித்து நடந்த முதற்கட்ட விசாரணையில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பற்றி எரிந்த தனியார் மருத்துவமனை.. 5 நோயாளிகள் உட்பட 8 பேர் பரிதாப பலி: ம.பி-யில் அதிர்ச்சி சம்பவம்!

மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories