இந்தியா

ஹாரன் அடித்தும் வழி விடாததால் ஆத்திரம்.. நடுரோட்டில் 16 வயது சிறுமி செய்த கொடூரச் செயல்!

சத்தீஸ்கரில் மாற்றுத்திறனாளியை சிறுமி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாரன் அடித்தும் வழி விடாததால் ஆத்திரம்.. நடுரோட்டில் 16 வயது சிறுமி செய்த கொடூரச் செயல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இதனால் அந்த சிறுமி ஹாரன் அடித்து முன்னே இருந்த வாகனங்களை வழிவிடும்படி கூறியுள்ளார்.

ஹாரன் அடித்தும் வழி விடாததால் ஆத்திரம்.. நடுரோட்டில் 16 வயது சிறுமி செய்த கொடூரச் செயல்!

இதற்குச் சிறுமியின் முன்னாள் இருந்த நபர் வழிவிட மறுத்துள்ளார். இதனால் சிறுமி ஆத்திரமடைந்து அந்த நபரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது தன்னிடம் இருந்த சிறிய கத்தியை எடுத்து அந்த நபரின் கழுத்தில் குத்தியுள்ளார்.இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு இருந்த பொதுமக்கள் அச்சிறுமியை மடக்கிப் பிடித்துள்ளனர். மேலும் சிறுமி கொலை செய்த நபர் காது கேளாத மாற்றுதிறனாளி.

ஹாரன் அடித்தும் வழி விடாததால் ஆத்திரம்.. நடுரோட்டில் 16 வயது சிறுமி செய்த கொடூரச் செயல்!

பிறகு அங்கு வந்த போலிஸாரிடம் சிறுமியை பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாற்றுத்திறனாளியை சிறுமி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories