இந்தியா

கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட கலர் ஜெராக்ஸ்.. 3 பேரை சுற்றி வளைத்து பிடித்த போலிஸ்!

ஆந்திர மாநிலத்தில் கள்ளநோட்டு அடித்து புழக்கத்தில் விட்ட மூன்று பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட கலர் ஜெராக்ஸ்..   3 பேரை சுற்றி வளைத்து பிடித்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள வாரசந்தையில் கள்ள நோட்டுகளுடன் கும்பல் ஒன்று சுற்றி வருவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அப்பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது மூன்று பேர் சந்தேகத்திற்கு இடமாகச் சுற்றித்திரிந்தனர். இதையடுத்து போலிஸார் அவர்களைப் பிடித்து சோதனை செய்தபோது கள்ளநோட்டு இருந்தை கண்டுபிடித்தனர்.

கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட கலர் ஜெராக்ஸ்..   3 பேரை சுற்றி வளைத்து பிடித்த போலிஸ்!

இதையடுத்து மூன்று பேரையும் போலிஸார் கைது செய்து விசாரணை செய்தனர். இதில் சித்தூரில் மறைவான இடத்தில் இந்த மூன்று பேரும் கலர் ஜெராக்ஸ் மூலம் கள்ள நோட்டுகளை அச்சடித்து வந்தது தெரியவந்தது.

கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட கலர் ஜெராக்ஸ்..   3 பேரை சுற்றி வளைத்து பிடித்த போலிஸ்!

பின்னர் அங்கிருந்த கலர் ஜெராக்ஸ் எந்திரம், மூன்று இருசக்கர வாகனம் மற்றும் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் ஜெகதீஷ், வெங்கடேஷ், சோமசேகர் என்பது அவர்கள் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories