இந்தியா

தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு, கண்ணில் குச்சியைச் சொருகிவிட்டுச் சென்ற ‘சைக்கோ’.. நடந்தது என்ன?

தனியாக இருந்த பெண்ணின் வீட்டில் நுழைந்து, கண்ணில் குச்சியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடிய மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனியாக இருந்த பெண்ணை  கட்டிப்போட்டு, கண்ணில் குச்சியைச் சொருகிவிட்டுச் சென்ற ‘சைக்கோ’.. நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் இருக்கும் டக்லா என்ற கிராமத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கணவர் தற்போது டெல்லியில் வேலை பார்த்து வருவதால், தனது 8 வயது குழந்தையுடன் தனியே வசித்து வருகிறார்.

தனியாக இருந்த பெண்ணை  கட்டிப்போட்டு, கண்ணில் குச்சியைச் சொருகிவிட்டுச் சென்ற ‘சைக்கோ’.. நடந்தது என்ன?

இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல், வீட்டிற்குள் இவரும், இவரது மகளும் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் கதவு யாரோ தட்டிய சத்ததை கேட்ட அந்த பெண் எழுந்து கதவை திறந்துள்ளார். அந்த சமயத்தில் வெளியில் இருந்து அந்த பெண்ணை மர்ம நபர் ஒருவர் கீழே தள்ளிவிட்டு, கயிற்றை கொண்டு அவரை கட்டி போட்டு, அவரது கண்ணில் ஒரு குச்சியை கொண்டு குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தனியாக இருந்த பெண்ணை  கட்டிப்போட்டு, கண்ணில் குச்சியைச் சொருகிவிட்டுச் சென்ற ‘சைக்கோ’.. நடந்தது என்ன?

இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் இரத்தம் சொட்ட சொட்ட கதறி அழுதார். இவரது சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான விசாரணையில் எம்.டி சமீம் என்பவரை கைது செய்து இது பாலியல் வன்கொடுமைக்காக செய்யப்பட்ட குற்றமா என்று விசாரித்து வருகின்றனர்.

தனியாக இருந்த பெண்ணை  கட்டிப்போட்டு, கண்ணில் குச்சியைச் சொருகிவிட்டுச் சென்ற ‘சைக்கோ’.. நடந்தது என்ன?

மேலும் அந்த பெண்ணை அனுமதித்த மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் கூறுகையில், "கண்ணில் குச்சியை வைத்து குத்தியதால், அந்த பெண்ணுக்கு பார்வை கிடைக்குமா என்பது சந்தேகமே" என்றனர். யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பெண்ணின் கண்ணில் குச்சியை வைத்து தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories