சினிமா

"இதே Chair தான்.. 4 வருடங்களுக்கு பிறகு.." - புற்றுநோயில் இருந்து மீண்ட 'காதலர் தினம்' ரோஜா உருக்கம் !

பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே, தனது புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

"இதே Chair தான்.. 4 வருடங்களுக்கு பிறகு.." - புற்றுநோயில் இருந்து மீண்ட 'காதலர் தினம்' ரோஜா உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த 1995 இல் வெளியான 'பம்பாய்' திரைப்படத்தில் இடம்பெற்று "ஹம்மா ஹம்மா" பாடல் மூலம் தமிழ் திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் சோனாலி பிந்த்ரே. பாலிவுட் நடிகையான இவர், 1999 -ல் வெளிவந்த 'காதலர் தினம்' படத்தில் ரோஜாவாக நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி என்று பல்வேறு மொழிகளில் நடித்து வந்த சோனாலிக்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பூரண குணமடைந்த இவர், அண்மையில் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

"இதே Chair தான்.. 4 வருடங்களுக்கு பிறகு.." - புற்றுநோயில் இருந்து மீண்ட 'காதலர் தினம்' ரோஜா உருக்கம் !

அப்போது அங்கு தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு சென்று, தான் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று பார்த்தார். அங்கு ஒரு நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில், "4 ஆண்டுகளுக்குப் பிறகு.. இதே நாற்காலி, இதே பார்வை, இதே இடம்.. முழுமையான பயத்திலிருந்து தொடர்ந்த நம்பிக்கை வரை, பல மாறிவிட்டது, சில இன்னும் மாறாமல் அப்படியே இருக்கின்றன.. தான் இதே இடத்திற்கு மீண்டும் வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை" என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

"இதே Chair தான்.. 4 வருடங்களுக்கு பிறகு.." - புற்றுநோயில் இருந்து மீண்ட 'காதலர் தினம்' ரோஜா உருக்கம் !

சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு தான் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட அதே மருத்துவமனைக்கு திரும்ப சென்று எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த சோனாலியின் செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories