இந்தியா

ஆசிர்வாதம் வாங்குவது போல் நடித்து கொடூரம்.. கர்நாடகத்தை சேர்ந்த பிரபல சாமியார் குத்திக் கொலை!

கர்நாடகாவில் பிரபல வாஸ்து நிபுணர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிர்வாதம் வாங்குவது போல் நடித்து கொடூரம்.. கர்நாடகத்தை சேர்ந்த பிரபல சாமியார் குத்திக் கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடகாவில் மிகவும் பிரபலமான வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி. கர்நாடக முக்கிய பிரபலங்களுக்கு வாஸ்து கூறிய இவர் முக்கிய பிரமுகராகவும் விளங்கினார். ஒப்பந்தகாரராக தன்னுடைய தொழிலைத் தொடங்கிய இவர் பின்னர் வாஸ்து நிபுணராக மாறினார்.

இந்த நிலையில் இவரை இருவர் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளது கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் படுகொலை செய்யப்படும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிர்வாதம் வாங்குவது போல் நடித்து கொடூரம்.. கர்நாடகத்தை சேர்ந்த பிரபல சாமியார் குத்திக் கொலை!

அந்த வீடியோவில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி சென்றுள்ளார். அவர் வரும் முன்பே இருவர் அவருக்காக காத்திருந்துள்ளனர். பின்னர் சந்திரசேகர் குருஜி வந்து அங்குள்ள சோபாவில் அமர்ந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து சந்திரசேகர் குருஜியின் காலில் விழுந்து வணங்கிய அந்த இளைஞர்கள், பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சந்திரசேகர் குருஜியை மாறிமாறி குத்த்தியுள்ளார். இதை தடுக்க முயற்சி செய்த குருஜி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். ஆனாலும் அந்த இளைஞர்கள் குருஜியை தாக்கியுள்ளனர்.

அங்கு இருந்தவர்கள் இதை தடுக்க முயற்சித்த போதிலும் அவர்களை அந்த இளைஞர்கள் கத்தியால் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவத்தில் குருஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories