இந்தியா

"பா.ஜ.க-வை வாலை சுருட்டிக்கொண்டு ஓடவைத்த வலிமையான தலைவர் மு.க.ஸ்டாலின்" : மேற்கு வங்க எம்.பி புகழாரம்!

தமிழ்நாட்டில் பாஜகவை வாலை சுருட்டி ஓடவைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலிமையான தலைவர் என மேற்குவங்க எம்.பி மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.

"பா.ஜ.க-வை வாலை சுருட்டிக்கொண்டு ஓடவைத்த வலிமையான தலைவர் மு.க.ஸ்டாலின்" : மேற்கு வங்க எம்.பி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

‘ஜனநாயக சொற்பொழிவு, அதிகார மறுசீரமைப்பு, இந்திய கூட்டாட்சியின் புதிய அமைப்பு’ என்ற தலைப்பில் இந்தியா டுடே 'கான்க்ளேவ் ஈஸ்ட்' என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறது. இந்த நிகழ்ச்சியில், மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, வங்காள ஆளுநர் ஜக்தீப் தன்கர், நடிகர் ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மக்களவை எம்பி மஹுவா மொய்த்ரா, பிரதமர் மோடியையும் அவரது அரசையும் கடுமையாக விமர்சித்தார்.

"பா.ஜ.க-வை வாலை சுருட்டிக்கொண்டு ஓடவைத்த வலிமையான தலைவர் மு.க.ஸ்டாலின்" : மேற்கு வங்க எம்.பி புகழாரம்!

நிகழ்ச்சியில் பேசிய அவர், "56 இன்ச் மார்பில் தினமும் அடித்துக்கொண்டு, நான் சிறந்தவர், நான் வலிமையானவன் என்று சொல்வது மட்டும் வலிமைக்கு அழகல்ல,

எதிர்கட்சிகளில் வலிமையான தலைவர் இல்லை என்பது உண்மைக்கு புறம்பானது. மம்தா பானர்ஜீ வலிமையான தலைவர்தான். தமிழ்நாட்டில் பாஜகவை வாலை சுருட்டி ஓடவைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலிமையான தலைவர்தான்.

"பா.ஜ.க-வை வாலை சுருட்டிக்கொண்டு ஓடவைத்த வலிமையான தலைவர் மு.க.ஸ்டாலின்" : மேற்கு வங்க எம்.பி புகழாரம்!

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகிறது. 65 ஆண்டுகளுக்குப் பிறகு 2014ல் திட்டக் கமிஷன் அகற்றப்பட்டபோது கூட்டாட்சி முறைக்கு முதல் அடி விழுந்தது.

திட்டக் கமிஷன்மாநிலங்களுடனான ஒருமித்த உடன்படிக்கையின் அடிப்படையில் மானியங்கள் வழங்கப்படுவதைக் கையாண்டது. ஆனால் இப்போது, ​​நீதி ஆயோக் அதன் விருப்பத்தின் அடிப்படையில் மானியங்கள் வழங்குகிறது" என பாஜகவை விமர்சித்தார்.

banner

Related Stories

Related Stories