இந்தியா

“வாயில் பூச்சிக்கொல்லி மருந்து.. வீட்டிலிருந்து 9 பேரின் சடலம் மீட்பு”: ஊரையே நடுங்க வைத்த பகீர் சம்பவம்!

மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“வாயில் பூச்சிக்கொல்லி மருந்து.. வீட்டிலிருந்து 9 பேரின் சடலம் மீட்பு”: ஊரையே நடுங்க வைத்த பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம், மஹைசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மானிக் மற்றும் போபட். சகோதரர்களான இவர்கள் இருவரும் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனித்தனியாக அருகருகே உள்ள குடியிருப்புகளில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று இவர்களது வீடு நீண்ட நேரம் ஆகியும் திறக்காமல் இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

“வாயில் பூச்சிக்கொல்லி மருந்து.. வீட்டிலிருந்து 9 பேரின் சடலம் மீட்பு”: ஊரையே நடுங்க வைத்த பகீர் சம்பவம்!

பிறகு, அங்கு வந்த போலிஸார் இருவரது வீட்டிற்கும் சென்று பார்த்தபோது அனைவரும் இறந்த நிலையில் சடலமாக இருந்துள்ளனர். இதையடுத்து ஒரு வீட்டில் ஆறு சடலங்களும் மற்றொரு வீட்டில் மூன்று சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த 9 உடல்களையும் போலிஸார் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

“வாயில் பூச்சிக்கொல்லி மருந்து.. வீட்டிலிருந்து 9 பேரின் சடலம் மீட்பு”: ஊரையே நடுங்க வைத்த பகீர் சம்பவம்!

முதற்கட்ட விசாரணையில், இறந்த சகோதரர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கு மேல் கடன் இருந்துள்ளது. இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு அழுத்தம் கொடுத்தால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மேலும் இறந்தவர்களின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் வாயில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டதற்கான தடையங்கள் இருந்துள்ளது. அதேபோல் சடலங்கள் அருகே ரூ.5 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் கடன் கொடுத்தற்கான ரசீது இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

“வாயில் பூச்சிக்கொல்லி மருந்து.. வீட்டிலிருந்து 9 பேரின் சடலம் மீட்பு”: ஊரையே நடுங்க வைத்த பகீர் சம்பவம்!

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories