உலகம்

“காதல் திருமணம் செய்தவர் ஆணே இல்லை - உண்மை தெரிய இத்தனை நாட்களா?” : அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

காதலித்து திருமணம் செய்த கணவர் ஆணே இல்லை என்பது 10 மாதங்களுக்கு பிறகு அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“காதல் திருமணம் செய்தவர் ஆணே இல்லை - உண்மை தெரிய இத்தனை நாட்களா?” : அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தோனோஷியாவின் ஜாம்போ என்ற பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவருக்கு டேட்டிங் ஆப் மூலமாக ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதைத் தொடர்ந்து நேரில் சந்தித்து மூன்று மாதமாக காதலை வளர்த்த இவர்கள், பின்னர் திருமணம் செய்துகொண்டனர்.

ஆரம்பத்தில் திருமணம் முடிந்து பெண்ணின் வீட்டில் தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். அப்போது மனைவியிடம் அந்த நபர் அடிக்கடி பணம் வாங்கி வந்துள்ளார்.

“காதல் திருமணம் செய்தவர் ஆணே இல்லை - உண்மை தெரிய இத்தனை நாட்களா?” : அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

தொழிலதிபர் என்று அறிமுகமானவர் தங்கள் மகளிடம் அடிக்கடி பணம் வாங்கியதால் மருமகன் மீது பெண்ணின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனைவியை அழைத்துக்கொண்டு அவர் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளார். மேலும் தனது மனைவியை யாரிடமும் பேசவிடாமல் அடைத்தும் வைத்துள்ளார். இதன் காரணமாக போலிஸில் புகாரளித்த மகளில் பெற்றோர் பின்னர் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து மகளை மீட்டனர்.

“காதல் திருமணம் செய்தவர் ஆணே இல்லை - உண்மை தெரிய இத்தனை நாட்களா?” : அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

இதைத் தொடர்ந்து போலிஸார் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஆண் இல்லை என்பதும் அவர் உண்மையில் ஒரு பெண் என்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக பேசிய பாதிக்கப்பட்ட பெண் உடல் உறவின்போது வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து எனது கண்ணை கட்டிவிடுவார் எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் இந்தோனேஷியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories