இந்தியா

“2 கோடி பேருக்கு வேலை என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு?” : மோடி அரசை கேள்வியால் துளைத்தெடுத்த பா.ஜ.க MP!

பிரதமர் மோடியின் அலுவலகம் வேலை வாய்ப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ.க எம்.பி-யே கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

“2 கோடி பேருக்கு வேலை என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு?” : மோடி அரசை கேள்வியால் துளைத்தெடுத்த பா.ஜ.க MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வேலையின்மை அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா காலத்தில் லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.

முன்னதாக 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டு என பா.ஜ.க அளித்த தேர்தல் வாக்குறுதியை கடந்த 8 ஆண்டுகளில் நிறைவேற்றதா நிலையில், இந்தியாவில் வேலையின்மை விகிதம் மேலும் மேலும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக, இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) எச்சரித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து ஒன்றிய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் உள்ள காலியிடங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதில், அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்த வேண்டும் என பிரதமர் மோடி அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தினார் என்று பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

பிரதமர் மோடியின் அலுவலகம் வேலை வாய்ப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ.க எம்.பி-யே இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க-வின் எம்.பி-யாக இருக்கும் வருண் காந்தி, புதிய வேளாண் சட்டங்கள் துவங்கி ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்தவகையில், வருன்காந்தி இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரதமருக்கு நன்றி. வேலையில்லா இளைஞர்களின் வலியையும், உணர்வுகளையும் நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்குவதோடு நாம் 1 கோடி காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் வாக்குறுதி கொடுத்தபடி ஆண்டுக்கு 2 கோடி வேலைகளை உருவாக்க முடியும். அந்த இலக்கை அடைய கூடுதல் வேகத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories