இந்தியா

உண்மையென நம்பி ஏமாந்த நடிகை கங்கனா ரனாவத்.. ட்ரால் செய்யும் நெட்டிசன்கள்: பின்னணி என்ன?

சமூக வலைதளங்களில் நடிகை கங்கனா ரனாவத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

உண்மையென நம்பி ஏமாந்த நடிகை கங்கனா ரனாவத்.. ட்ரால் செய்யும் நெட்டிசன்கள்: பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முகமது நபியைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நிவீன் ஜிந்தால் ஆகியோர் தெரிவித்தனர். இதையடுத்து இவர்களின் மத வெறுப்பு பேச்சுக்கு இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் அல்லாமல் கத்தார், ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தன.

இதையடுத்து நுபுர் சர்மா மற்றும் நிவீன் ஜிந்தால் ஆகிய இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது பா.ஜ.க. இருப்பினும் இவர்களின் மத வெறுப்பு பேச்சு இந்தியாவையே அசிங்கப் படுத்தி விட்டதாகப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நுபுர் சர்மாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத். இது குறித்துக் கூறிய கங்கனா, கருத்துச் சொல்ல நுவுர் சர்மாவிற்கு உரிமை உள்ளது. அவரை குறிவைத்து அச்சுறுத்துகின்றனர். இது ஆஃபானிஸ்தான் அல்ல என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகியைக் கிண்டல் செய்து நெட்டிசன்கள் பலரும் சமூகவலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ஒன்றை உண்மை என நம்பி நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகீர்த்துள்ளார்.

உண்மையென நம்பி ஏமாந்த நடிகை கங்கனா ரனாவத்.. ட்ரால் செய்யும் நெட்டிசன்கள்: பின்னணி என்ன?

அவர் பகீர்ந்த அந்த வீடியோவில், "வாசுதேவ் எங்களின் மிகப்பெரிய பங்குதாரர் ₹ 624.50 முதலீட்டில் இருக்கிறார். இனி எப்படி இயக்குவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எல்லா விமானங்களையும் நிறுத்திவிட்டோம். எங்கள் செயல்பாடுகள் இனி இயங்காது. இந்த புறக்கணிப்பு அழைப்பை வாசுதேவ் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என இருந்துள்ளது.

இந்த வீடியோவை தான் பகிர்ந்து, கத்தார் ஏர்வேஸ் தலைவர் அக்பர் அல் பேக்கரை முட்டாள் என திட்டி பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வீடியோ போலியானது என தெரிந்த உடன் அதை கங்கனா நீக்கியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் கங்கனா ரனாவத் பகிர்ந்த வீடியோவை ஸ்கிரின் ஷாட் எடுத்துக் கிண்டல் செய்து வருகின்றனர்.

சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர் கங்கனா ரனாவாத். ட்விட்டர் எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டதால் அவரது முகவரியை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இதையடுத்து இன்ஸ்டாகிராமில் தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் உண்மை என நம்பி போலி வீடியோவை பகிர்ந்து தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.

banner

Related Stories

Related Stories