உலகம்

52 வயது பெண்ணை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்ட இளைஞர்.. அதிர்ச்சி சம்பவத்தின் Video!

நியூயார்க் நகரத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய, தண்டவாளத்தில் பெண்ணை இளைஞர் ஒருவர் தள்ளிவிடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

52 வயது பெண்ணை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்ட இளைஞர்.. அதிர்ச்சி சம்பவத்தின்  Video!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நியூயார்க் நகரில் ப்ராங்க்ஸ் மெட்ரோ ரயில்நிலையம் உள்ளது. இங்கு 52 வயது மதிக்கத்தக்கப் பெண்ணை இளைஞர் ஒருவர் திடீரென தண்டவாளத்தில் தள்ளியுள்ளார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெண் தண்டவாளத்தில் விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரயில் எதுவும் வராததால் பெரிய அசம்பாவிதம் ஏற்படவில்லை.

இதையடுத்து அங்கிருந்த சிலர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பிறகு அங்கிருந்த பாதுகாப்பு போலிஸார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில், அவரின் பெயர் எல்லிஸ் என்றும் பிராங்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

எதற்காக அந்த பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிட்டார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எல்லிஸ், பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிடும் வீடியோவை நியூயார்க் போலிஸார் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories