இந்தியா

“பிரதமர் மோடியின் 8 ஆண்டுகள்.. பாரத மாதாவுக்கு பெரிய அவமானம்” : சுப்பிரமணியன் சாமி கடும் தாக்கு !

மோடியில் 8 ஆண்டு ஆட்சியில் இந்தியா சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்து விட்டது என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

“பிரதமர் மோடியின் 8 ஆண்டுகள்.. பாரத மாதாவுக்கு பெரிய அவமானம்” : சுப்பிரமணியன் சாமி கடும் தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கடந்த மே மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, இஸ்லாமிய மதத்தையும், முகமது நபியை பற்றியும் சர்ச்சைக்குறிய கருத்தைத் தெரிவித்திருந்தார். அதேபோல், நவீன் ஜிந்தால் என்ற பா.ஜ.க நிர்வாகியும், நபிகள் குறித்து சர்ச்சை கருத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகீர்ந்திருந்தார்.

இவர்களின் கருத்திற்கு இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் அல்லாமல் கத்தார், ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, ஓமன் போன்ற நாடுகளில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தது. இதனால் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிந்தால் ஆகிய இருவரையும் கட்சியிலிருந்து பா.ஜ.க இடைநீக்கம் செய்துள்ளது.

இதையடுத்து இந்தியத் தூதரகம் இப்பிரச்சனைக்கு வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமல்லாது முகமது நபிகள் மீதான எவ்விதமான விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என விளக்கம் கொடுத்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த விளக்கத்திற்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாரத மாதா தலையை அவமானத்தில் தொங்கப் போடும் நிலை ஏற்பட்டு விட்டது என பிரதமர் மோடியை பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து சுப்பிரமணியன் சாமி வெளியிட்ட ட்விட்டர் பதிவில்," மோடியின் 8 ஆண்டு ஆட்சியில் பாரத மாதா தலையை அவமானத்தால் தொங்கப் போடும் நிலை ஏற்பட்டுவிட்டது. நாம் சீனாவிடம் லடாக்கில் மண்டியிட்டுவிட்டோம், ரஷ்யர்களிடம் அடிபணிந்துவிட்டோம், அமெரிக்காவிடம் குவாட் மீட்டிங்கில் பணிந்துவிட்டோம்.

இதனால் பாரத மாதா தலையை அவமானத்தில் தொங்கப் போடும் நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது கத்தார் என்ற சிறிய நாட்டிடம் இந்தியா சாஷ்டாங்கமாக காலில் விழுந்து விட்டது. இது இந்திய வெளியுறவுக் கொள்கையின் சீரழிவு” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories