இந்தியா

‘இந்தியாவுக்கு ஏற்பட்ட தலைகுனிவு..’ : கடைகளில் இருந்து இந்திய பொருட்களை வெளியேற்றும் அரபு நாடுகள் !

சவூதி அரேபியா, பக்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் இந்திய பொருட்களை மக்கள் வாங்கவேண்டாம் என்றும் பிரச்சாரம் செய்து “இந்திய பொருட்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள்” என ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர்.

‘இந்தியாவுக்கு ஏற்பட்ட தலைகுனிவு..’ : கடைகளில் இருந்து இந்திய பொருட்களை வெளியேற்றும் அரபு நாடுகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சவூதி அரேபியா, பக்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளில், இந்திய பொருட்கள் அகற்றப்பட்டு, இந்திய பொருட்களை மக்கள் வாங்கவேண்டாம் என்றும் பிரச்சாரம் செய்து, இந்திய பொருட்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் என அந்நாட்டு மக்கள் ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர்.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கடந்த மே மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். அப்போது அவர், இஸ்லாமிய மதத்தை பற்றியும், முகமது நபிகள் பற்றியும் எதிர் கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல், நவீன் ஜிந்தால் என்ற பா.ஜ.க நிர்வாகியும், நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், நுபுர் சர்மா இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் புகாரளித்தனர். இதையடுத்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக நுபுர் சர்மாவிற்கு எதிராக மகாராஷ்டிராவில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டது.

இந்நிலையில், முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசியது தொடர்பாக பேசிய பா.ஜ.க தலைவர்களை கண்டித்து சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அங்கு பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டி மூலம் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, ஓமன் நாட்டினை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர், அவதூறு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பா.ஜ.கவினர் மீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்திருந்தார். மேலும் அரபு நாடுகளைச் சேர்ந்த மக்கள், இந்திய பொருட்களை புறக்கணிக்குமாறு வலியுறுத்தினார். இதனையடுத்து ட்விட்டரில் #boyCottIndia என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாகியது மட்டுமல்லாது, மற்றொரு பெரும் விளைவுகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற முறையில் அவை முடிந்திருக்கிறது. அதன்படி, சவூதி அரேபியா, பக்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் இந்திய பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றனர். மேலும் ‘இந்திய பொருட்களை மக்கள் வாங்கவேண்டாம்’ என பிரச்சாரம் செய்து, ‘இந்திய பொருட்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள்’ என ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர். இது இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories