இந்தியா

முகமது நபிகள் குறித்து அவதூறு.. பா.ஜ.க.வினரின் மதவெறுப்பு பேச்சால் கொந்தளித்த அரபு மக்கள் - பின்னணி என்ன?

முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசி பா.ஜ.க தலைவர்களை கண்டித்து சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளனஎ.

முகமது நபிகள் குறித்து அவதூறு.. பா.ஜ.க.வினரின் மதவெறுப்பு பேச்சால் கொந்தளித்த அரபு மக்கள் - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு அவதூறு கருத்தக்களை, மத வெறி வெறுப்பு பேச்சுக்களை பா.ஜ.க தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை பேசி வந்த நிலையில், தற்போது பா.ஜ.க தலைவர்களின் இஸ்லாமிய வெறுப்பு பேச்சால் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கடந்த மே மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், இஸ்லாமிய மதத்தை பற்றியும், முகமது நபியை பற்றியும் எதிர் கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல், நவீன் ஜிந்தால் என்ற பா.ஜ.க நிர்வாகியும், நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பகீர்ந்திருந்தார்.

இந்நிலையில், நுபுர் சர்மா இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் புகாரளித்தனர். இதையடுத்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக நுபுர் சர்மாவிற்கு எதிராக மகாராஷ்டிராவில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த நிலையில், இவரது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் இந்துத்வா கும்பலைச் சேர்ந்த வன்முறையாளர்கள் கலவரத்தை தூண்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முகமது நபிகள் குறித்து அவதூறு.. பா.ஜ.க.வினரின் மதவெறுப்பு பேச்சால் கொந்தளித்த அரபு மக்கள் - பின்னணி என்ன?

இந்நிலையில், முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசியது தொடர்பாக பேசிய பா.ஜ.க தலைவர்களை கண்டித்து சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அங்கு பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டி மூலம் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து இந்த விவகாரம், சர்வதேச அளவில் சர்ச்சை கிளம்பி நிலையில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரை நீக்கம் செய்து பா.ஜ.க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் பா.ஜ.க நடவடிக்கையால் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories