இந்தியா

நபிகள் பற்றி வெறுப்பு பேச்சு.. உலகம் முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு: விழிபிதுங்கி நிற்கும் மோடி!

பா.ஜ.க செய்தி தொடர்பாளர்கள் பேசிய கருத்தி உலக முழுவதும் பெரும் பரவி பிரதமர் மோடிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

நபிகள் பற்றி வெறுப்பு பேச்சு.. உலகம் முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு: விழிபிதுங்கி நிற்கும் மோடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கடந்த மே மாதம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, இஸ்லாமிய மதத்தையும், முகமது நபியை பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். அதேபோல், நவீன் ஜிந்தால் என்ற பா.ஜ.க நிர்வாகியும், நபிகள் குறித்து சர்ச்சை கருத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இவர்களின் கருத்திற்கு இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் அல்லாமல் கத்தார், ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, ஓமன் போன்ற நாடுகளில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தது. இதனால் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிந்தால் ஆகிய இருவரையும் கட்சியிலிருந்து பா.ஜ.க இடைநீக்கம் செய்துள்ளது.

இந்நிலையில், முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசியது தொடர்பாகப் பேசிய பா.ஜ.க தலைவர்களைக் கண்டித்து சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நபிகள் பற்றி வெறுப்பு பேச்சு.. உலகம் முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு: விழிபிதுங்கி நிற்கும் மோடி!

மேலும் இந்தியப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற முறையில் அவை முடிந்திருக்கிறது. அதன்படி, சவூதி அரேபியா, பக்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் இந்திய பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றனர். அதேபோல் இந்திய பொருட்களை வாங்க வேண்டாம் எனவும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் கத்தார் சுற்றுப்பயணத்தில் உள்ள துணை ஜனாதிபதிக்கு நெருக்கடி எழுந்துள்ளது. நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கத்தார் அதிபரின் தந்தை ஷேக் ஹமாத் பின் கலீபா அல் தானியுடன் சந்தித்தார். அதனையடுத்து பிரதமர் ஷேக் காலித் அப்துல்லாஸ் அல் தானியுடன் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிலையில் பா.ஜ.க செய்தி தொடர்பாளர்கள் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வெங்கையா நாயுடு மேற்கொள்ள இருந்த செய்தியாளர் சந்திப்பும், துணை அதிபர் ஷேக் அப்துல்லா பின் அகமதுடன் நடக்க இருந்த மதிய உணவு விருந்தும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பா.ஜ.க செய்தி தொடர்பாளர்கள் பேசிய கருத்து உலக முழுவதும் பெரும் பரவி பிரதமர் மோடிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

banner

Related Stories

Related Stories