இந்தியா

மெட்ரோ ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பட்டப்பகலில் நடந்த கொடூரம் - ‘பகீர்’ வாக்குமூலம்!

டெல்லியிலுள்ள மெட்ரோ இரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரோ ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பட்டப்பகலில் நடந்த கொடூரம் - ‘பகீர்’ வாக்குமூலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி, ஜோர் பாக் பகுதியிலுள்ள மெட்ரோ இரயில் நிலையத்தில் பெண் ஒருவர், வழக்கம்போல் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான அந்த பெண், அங்கிருந்த CISF அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால், அதிகாரிகள் அந்த பெண்ணின் புகாரை ஏற்க மறுத்துள்ளதால், இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் இருந்தபோதிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து மக்கள் தொடர்பு அதிகாரி சுமன் நல்வா கூறியபோது, அந்த பெண்ணின் பதிவு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அவரின் புகார் குறித்து டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாகவும் என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் தெரிவித்தபோது, பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக கருதப்படும் மத்திய டெல்லியில் உள்ள ஜோர் பாக் போன்ற ரயில் நிலையத்தில், இதை தான் எதிர்பார்க்கவில்லை என்றும், இந்தச் சம்பவம் பகல் 2 மணியளவில் நடந்தது என்பதால் அந்த நேரத்தில் அங்கு ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருந்ததாகவும் கூறினார்.

மேலும் இந்த சம்பவத்தால் தான் மனரீதியாக மிகவும் பாதிக்கப்படைந்திருப்பதாகவும், இது தனக்கு குச்சுறுத்தியாகவும் தெரிவித்தார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories