இந்தியா

“பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை” : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

“பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை” : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அளவில் பா.ஜ.க-வை எதிர்க்கும் முதல்வர்கள் பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முக்கிய இடம் வகிக்கிறார். பா.ஜ.க.வை தொடர்ந்து விமர்சித்து வரும் மமதா பானர்ஜி, புருலியா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, பா.ஜ.க தலைமையிலான அரசாங்கத்தை கலப்பட அரசு என விமர்சித்துள்ளார்.

மேலும் பணமதிப்பிழப்பு போன்ற தவறான முடிவுகளின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதாகவும், எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்த மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், பா.ஜ.கவின் வெறுப்பு மற்றும் வன்முறை அரசியல் நாட்டில் நுழையாமல் இருப்பதை இந்திய மக்கள் உறுதி செய்வார்கள் எனவும் கூறியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் பா.ஜ.க 18 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தில் இரண்டாம் பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தற்போது அங்கு பாஜக தான் 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை அடுத்தடுத்த தேர்தல்களில் இழந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories