தமிழ்நாடு

‘1 ரூபாய் கூட வரலாற்றில் யாரும் டெபாசிட் செய்ததேயில்லை’ : அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த நிதியமைச்சர் PTR!

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து கருத்து கூறிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.

‘1 ரூபாய் கூட வரலாற்றில் யாரும் டெபாசிட் செய்ததேயில்லை’ : அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த நிதியமைச்சர் PTR!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில், நிதிச்சுமையைக் காரணம் காட்டி அ.தி.மு.க அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தது. இதற்கு புதில் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த புதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டமே கொண்டு வரப்படும் என தி.மு.க வாக்குறுதி கொடுத்தது. பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

மேலும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவுகளை வெளியிடுவார் என நடந்து முடிந்த சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் தமிழ்நாடு அரசு PFRDAவில் டெபாசிட் செய்ய வில்லை என உண்மைக்குப் புறம்பான தகவலை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டரில்," இந்த அறிக்கையில் அடிப்படை பிழைகள் பல உள்ளன, எங்கு தொடங்குவதென்று தெரியவில்லை. PFRDAவில் டெபாசிட் செய்வதா? டெபாசிட்களைப் பெற முடியாத ஒழுங்குமுறை ஆணையமான PFRDAவில் 1 ரூபாய் கூட வரலாற்றில் யாரும் டெபாசிட் செய்ததேயில்லை. பாக்கி பிழைகளைத் திருத்துவதற்கு, அறிக்கை வெளிவரும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories