இந்தியா

“உருது மொழிக்கு தடை.. மசூதிகளை தோண்டி ஆய்வு செய்வோம்” : பா.ஜ.க தலைவர் வெறுப்பு பேச்சு - குவியும் கண்டனம்!

மசூதிகள் தோண்டிப்பார்த்தால் சிவலிங்கம் கிடைக்கிறது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகளை தோண்டி ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என பா.ஜ.க எம்.பி சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார்.

“உருது மொழிக்கு தடை.. மசூதிகளை தோண்டி ஆய்வு செய்வோம்” : பா.ஜ.க தலைவர் வெறுப்பு பேச்சு - குவியும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே வரலாற்றை சிதைக்கும் செயலையும், வரலாற்று தலங்கள் மீதான தாக்குதலையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. சமீபத்தில் கூட பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை, புனரமைப்பு என்ற பெயரில் வரலாற்று தடயங்களை அழித்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தொடங்கி சமூக ஆர்வலர்கள் வரை பல்வேறு தரப்பும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனிடையே சிறுபான்மையினரின் புனித தலங்களில் இந்து மதத்தைச் சேர்ந்த கோவில்கள் முன்னொறு காலத்தில் இருந்தாக கட்டுக்கதைகளை கூறி, மசூதி உள்ளிட்ட புனித தளங்களை இடிக்கும் வேளைகளை இந்துத்துவா கும்பல்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது பா.ஜ.க-வினர் தாஜ்மஹால் குறித்து அவ்வபோது விஷம கருத்துகூறி வந்தநிலையில், தாஜ்மஹால் எங்கள் குடும்பத்தின் சொந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், தாஜ்மஹாலில் உள்ள ரகசிய அரையில் இந்து கடவுள்களின் சிலைகள் இருப்பதாகவும் பா.ஜ.க எம்.பி தியாகுமாரி கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதேப்போல், வாரணாசி ஞானவாபி அருகே மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி தொடர்பான வழக்கில் ஒன்றின் தொடர்பாக, வளாகத்தில் நடந்தப்பட்ட ஆய்வின் போது, லிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதுகுறித்த உண்மைத் தன்மையான குறித்து முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் தொகுதி எம்.பி பண்டி சஞ்சய் குமார் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுளது. கரீம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண பண்டி சஞ்ய்குமார், இஸ்லாமிய தலைவர்கள் குறித்து அவதூறாக பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு மதராக்களே காரணம். பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக மதரசாக்கள் செயல்படுகிறது. எனவே சட்டவிரோத செயல்களை மேற்கொள்பவர்களை அடையாளம் கண்டு களைய வேண்டும்.

இந்தியாவில் ராம ராஜ்ஜியம் வந்தால், உருது மொழிக்கு தடை விதிப்போம். மசூதிகள் தோண்டிப்பார்த்தால் சிவலிங்கம் கிடைக்கிறது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகளை தோண்டி ஆய்வு மேற்கொள்ளவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இவரின் இத்தகைய பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories