வைரல்

“அவசரபட்டு தோண்டிடாதீங்க.. விபரீதம் வேறமாதிரி இருக்கும்”: பா.ஜ.க கும்பலை கலாய்த்து தள்ளிய திரிணாமுல் MP !

தோண்டப்படும் பட்டியலில் அடுத்து பாபா அணு ஆராய்ச்சி மையம் இருக்காது என நம்புவோம் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹிவா மொய்த்ரா பதிலடி கொடுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“அவசரபட்டு தோண்டிடாதீங்க.. விபரீதம் வேறமாதிரி இருக்கும்”: பா.ஜ.க கும்பலை கலாய்த்து தள்ளிய திரிணாமுல் MP !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே வரலாற்றை சிதைக்கும் செயலையும், வரலாற்று தலங்கள் மீதான தாக்குதலையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. சமீபத்தில் கூட பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை, புனரமைப்பு என்ற பெயரில் வரலாற்று தடயங்களை அழித்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தொடங்கி சமூக ஆர்வலர்கள் வரை பல்வேறு தரப்பும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனிடையே சிறுபான்மையினரின் புனித தலங்களில் இந்து மதத்தைச் சேர்ந்த கோவில்கள் முன்னொறு காலத்தில் இருந்தாக கட்டுக்கதைகளை கூறி, மசூதி உள்ளிட்ட புனித தளங்களை இடிக்கும் வேளைகளை இந்துத்துவா கும்பல்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது பா.ஜ.க-வினர் தாஜ்மஹால் குறித்து அவ்வபோது விஷம கருத்துகூறி வந்தநிலையில், தாஜ்மஹால் எங்கள் குடும்பத்தின் சொந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், தாஜ்மஹாலில் உள்ள ரகசிய அரையில் இந்து கடவுள்களின் சிலைகள் இருப்பதாகவும் பா.ஜ.க எம்.பி தியாகுமாரி கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதேப்போல், வாரணாசி ஞானவாபி அருகே மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி தொடர்பான வழக்கில் ஒன்றின் தொடர்பாக, வளாகத்தில் நடந்தப்பட்ட ஆய்வின் போது, லிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதுகுறித்த உண்மைத் தன்மையான குறித்து முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், மசூதிகள் மற்றும் வரலாற்று சின்னங்கள் மீது இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவித்து வரும் இந்துத்வா கும்பலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹிவா மொய்த்ரா பதிலடி கொடுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹிவா மொய்த்ரா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் வெளிப்புறத் தோற்றம் உடைய புகைப்படத்தை வெளியிட்டு, “தோண்டப்படும் பட்டியலில் அடுத்து பாபா அணு ஆராய்ச்சி மையம் இருக்காது என நம்புவோம்” எனத் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து லிங்க அமைப்பில் இருக்கும் அணு ஆராய்ச்சி மையத்தை தோண்டிட வேண்டாம் என பலரும் நகைச்சுவையாக பா.ஜ.க உள்ளிட்டோரை கலாய்த்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories