இந்தியா

ஜிப்மரில் இந்தியை கட்டாயமாக்க உத்தரவு : “ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி?” - கொந்தளிக்கும் கனிமொழி MP!

ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? தி.மு.க மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜிப்மரில் இந்தியை கட்டாயமாக்க உத்தரவு : “ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி?” - கொந்தளிக்கும் கனிமொழி MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி கோரிமேட்டில் ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதனிடையே பொதுவாக ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் அலுவலர் ரீதியான பயன்பாட்டிற்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை ஜிம்பர் இயக்குநர் பிறப்பித்துள்ளது.

அதாவது ஒன்றிய அரசு அலுவலகங்களின் ரிஜஸ்டர் மற்றும் பைல்களில் இதுவரை இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் ரிஜஸ்டர் மற்றும் பைல்களில் இனி வரும் காலத்தில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஜிப்மர் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜிப்மர் இயக்குநரின் இந்த உத்தரவை பலரும் கண்டித்து வருகின்றனர். ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையில் முயற்சி தான் இது என்றும், இதனை அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து தி.மு.க மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி எம்.பி தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சனையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories