இந்தியா

பெற்ற மகளை தன் இச்சைக்கு இரையாக்கிய கொடூர தந்தை; எதிர்க்காத தாய்: வீடியோ எடுத்து உதவி கேட்ட 18 வயது பெண்!

தன்னை அப்பா வன்கொடுமை செய்வதை அறையில் மறைத்து வைத்திருந்த செல்போன் மூலம் பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியேற்றி தனக்கு உதவுமாறு கோரியிருக்கிறார்.

பெற்ற மகளை தன் இச்சைக்கு இரையாக்கிய கொடூர தந்தை; எதிர்க்காத தாய்: வீடியோ எடுத்து உதவி கேட்ட 18 வயது பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வட மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளை பெற்ற மகளை, உடன் பிறந்த சகோதரியை, கட்டிய மனைவியை என பெண்களை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூரில் ஆசிரியராக பணியாற்றும் தந்தை ஒருவர் தனது 18 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

50 வயதான அந்த நபர் 18 வயது மகளை தொடர்ந்து தனது இச்சைக்கு இரையாக்கியிருக்கிறார். இதுபோக, ஈன்றெடுத்த தாயே இந்த கொடூரத்தை தட்டிக்கேட்காமல் எதிர்க்காமல் இருந்திருக்கிறார். மேலும் தாயின் சகோதரரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மாமாவுமான அந்த நபர் அமைதியாக இருக்குமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்திருக்கிறாராம்.

எவரது உதவியும் கிடைக்காமல் தந்தையின் கொடூரத்தால் சிக்கித் தவித்து வந்த அப்பெண், தன்னை அப்பா வன்கொடுமை செய்வதை அறையில் மறைத்து வைத்திருந்த செல்போன் மூலம் பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியேற்றி தனக்கு உதவுமாறு கோரியிருக்கிறார்.

இதனைக் கண்ட இணையவாசிகள் ரோசேராவில் உள்ள காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர், வீடியோவில் இருந்த அந்த நபரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டி.எஸ்.பி. சாஹியர் அக்தர் தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவம் தற்போது சமஸ்திபுரம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

banner

Related Stories

Related Stories