தமிழ்நாடு

“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!

த.வெ.க. அரசின் பழிவாங்கும் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ;  மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் சந்திசிரித்துக் கொண்டிருக்கும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த முடியாமல், தி.மு.க. மீது வீண் பழியைப் போட்டு வரும் த.வெ.க. அரசு, தற்போது பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டது.

கரூரில் உள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களில் முறைகேடு எனக் கூறி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறைச் சோதனையை ஏவிவிட்டுள்ளது த.வெ.க. அரசு.

இந்த சோதனைகளுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு, ”த.வெ.க. அரசின் எண்ணம் என்றால் பழி வாங்கக்கூடிய ஒரு நோக்கமாக தான் இதை நான் பார்க்கிறேன். புதிதாக அமைக்கப்பட்ட தமிழக அரசு சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் பேச வேண்டும் என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும் என வாய்ப்பு வழங்க கூறினேன்.

மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் அளிக்க வேண்டுமென கூறி அதுதான் அரசியல் மரபு என நாங்கள் பேசினோம். அன்றைக்கு நான் சட்டப்பேரவையில் கொறடா என்கின்ற நோக்கில் கேட்ட கேள்வியை மனதில் வைத்துக்கொண்டு, இந்த அரசு பழிவாங்கக் கூடிய ஒரு நோக்கமாக இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது.

சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டினை மையப்படுத்தி தான் எனக்கு சொந்தமான மற்றும் எனக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். எனக்கு இரண்டு இடங்கள் மட்டுமே சொந்தமாக உள்ளது. மாறாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரக்கூடிய ஒரு கல்லூரியில் சோதனை மேற்கொள்வதாக கூறி காலை முதல் மாலை வரை மாணவர்களை படிக்க விடாமல் செய்து மாணவர்களின் மனநிலையை புண்படுத்தக்கூடிய ஒரு நோக்கில் இந்த சோதனை மேற்கொண்டுள்ளார்கள்.

இது போன்ற செயல்களில் தமிழக வெற்றிக்கழக அரசு ஈடுபட்டால் நாங்கள் பயந்து விடுவோம் என்று எண்ணுகிறது. நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு ஒரு பொழுதும் பயப்பட மாட்டோம். இந்த சோதனை தொடர்பாக நீதிமன்றத்தை தற்போது நாடி உள்ளோம் கண்டிப்பாக நீதிமன்றத்தில் நான் நிரபராதி என நிரூபித்து காட்டுவேன். நான் எந்த தவறும் செய்யாத ஒருவன், பரிசுத்தமானவன் என்பதை நீதிமன்றம் வாயிலாக நினைப்பேன்.

எனது தலைவர் மீசாவில் ஓராண்டு காலம் சிறையில் இருந்துள்ளார். எங்களது அரசு மிகச் சிறப்பாக மக்களின் நான் கருதி நடத்தி காட்டியுள்ளோம்.என்னிடம் இருந்து 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்பதை முழுக்க முழுக்கமான ஒரு பொய்.குறிப்பாக எனது சென்னை அலுவலகத்திலும், எனது சொந்த ஊர் கிராமத்திலும் இந்த பணம் பறிமுதல் செய்யப்படவில்லை.

குறிப்பாக பொதுப்பணித்துறை அமைச்சராக நான் இருந்த பொழுது நான் ஆய்வுக்காக மேற்கொள்ளக்கூடிய சுற்றுப் பயணங்கள் மற்றும் ஆய்வு மேற்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் கணினி வழியாக தான் பகிர்வேன். அதன் காரணமாக அந்த கணினியை பறிமுதல் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டனர்.

நானும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் தாராளமாக எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என தெரிவித்து வழங்கி விட்டேன். எனது கழக செயல்பாடுகள் தொடர்பாகவும் எனது செயல்பாடுகள் தொடர்பான விவரங்கள் மட்டுமே அதில் இருக்கும் அதன் காரணமாகவே அதனை வழங்கி விட்டேன். அதை அவர்கள் பார்த்துவிட்டு திருப்பி தருவதாக தெரிவித்துள்ளார்கள்.

கரூர் மாவட்டம் விவகாரம் பொறுத்தவரையில் ஒரு அலுவலகத்தில் தோட்டக்கலை நிறுவனத்தில் ஒரு டெண்டர் போட வேண்டும் என்றால் அதன் ஆவணங்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் மட்டுமே இருக்கும் ஒரு அமைச்சரின் இல்லத்தில் இருக்காது. நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் விடுவதற்கான அதிகாரம் இரண்டு அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ளது. எனவே அதற்கான ஒப்புதல் ஆவணம் அதிகாரியிடம் மட்டுமே இருக்குமே தவிர எனது இல்லத்தில் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை.

இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை என்பது அதிகாரத்தின் உச்சமாகவே நான் பார்க்கிறேன். ஜனநாயகத்தின்படி எதிர்க்கட்சியாக எங்களுக்கு கேள்வி கேட்க உரிமை உண்டு. அதன் அடிப்படையில் தான் நான் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி சார்பில் கேள்விகளை கேட்டேன். எங்களைப் போன்று மொழிப்போருக்காக சிறை சென்றும், மக்களுக்காக பணிகளையும் முதல்வர் ஈடுபட்டாரா? நாங்கள் மக்களுக்காக பாடுபட்டவர்கள், இந்த சோதனை முழுக்க முழுக்க அதிகாரத்தின் உச்சம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories