இந்தியா

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த போலிஸார்.. இளம் பெண் பரிதாப பலி: பா.ஜ.க ஆளும் உ.பி-யில் தொடரும் கொடூரம்!

உத்தர பிரதேசத்தில் விசாரணையின் போது போலிஸார் தாக்கியதில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த போலிஸார்.. இளம் பெண் பரிதாப பலி: பா.ஜ.க ஆளும் உ.பி-யில் தொடரும் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு இரண்டு பிரிவினர்களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது குறித்து விசாரணை செய்வதற்காகக் கன்னையா என்பவரின் வீட்டிற்கு நேற்று நள்ளிரவு போலிஸார் வந்துள்ளனர்.

அப்போது போலிஸார் கன்னையாவை அடித்து விசாரணை செய்துள்ளனர். இதைப்பார்த்த அவரது மகள் நிஷா மற்றும் அவரது மனைவி ஆகிய இரண்டு பேரும் போலிஸாரை தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போலிஸார் இவர்கள் இரண்டுபேரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதில் மயங்கி கீழே விழுந்த நிஷா சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் போலிஸாரை சூழ்ந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாவட்ட காவல் ஆய்வாளரை இடைநீக்கம் செய்ய எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் போலிஸ் சீருடை அணிந்த ரவுடிகள் ஆட்சி நடக்கிறது என சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் அனுராக் பதோரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories