இந்தியா

இந்தியாவில் எதிர்ப்பை சந்திக்கும் Ola eScooter : அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்.. என்ன செய்யப்போகிறது ஓலா?

ஓலா மின்சார ஸ்கூட்டரில் கழுதையை கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் நடந்துள்ளது.

இந்தியாவில் எதிர்ப்பை சந்திக்கும் Ola eScooter : அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்.. என்ன செய்யப்போகிறது ஓலா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் அண்மைக்காலங்களாக மின்சார வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. அதற்கு முழுமுதற் காரணமாக பெட்ரோல், டீசலின் விலையேற்றத்தை குறிப்பிடுகின்றனர். மக்களின் தேவையை உணர்ந்த நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கின. பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் பைக்கை தயாரித்து வரும் நிலையில், அந்தவாகனங்களில்பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், தீவிபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் கூட, வேலூரில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் திடீரென வெடித்ததால் தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஓலா மின்சார ஸ்கூட்டரில் கழுதையை கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் நடந்துள்ளது. சச்சின் கிட்டே என்ற நபர் சமீபத்தில் புதிதாக ஓலா ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கிய சில நாட்களிலேயே அடிக்கடி பழுது ஏற்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக ஓலா நிறுவத்திடம் கேட்டபோதும் முறையாக பதில் எதுவும் கிடைக்காத நிலையில் விரக்தி அடைந்த சச்சின் கிட்டே, எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நூதனப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்.

இந்தியாவில் எதிர்ப்பை சந்திக்கும் Ola eScooter : அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்.. என்ன செய்யப்போகிறது ஓலா?

அவர் வாங்கிய ஓலா ஸ்கூட்டரில் கழுதையைக் கட்டி இழுத்துச் சென்றுள்ளார். மேலும் கழுதை மற்றும் வாகனத்தின் முகப்பு மற்றும் கழுதையின் கழுத்தில், ஒரு அட்டையில் ஓலா நிறுவத்திடம் ஜாக்கிரதையாக இருங்கள்.. வாகனத்தை யாரும் நம்பி வாங்காதீர்கள் என்ற பதாகையுடன் நகரையே சுற்றி வலம் வந்துளார்.

இதுதொடர்பாக சச்சின் கிட்டே கூறுகையில், ஆசை ஆசையாய் வாங்கிய ஸ்கூட்டர் அது. 6 நாட்களே ஆன நிலையில், இன்று ஸ்கூட்டர் வேலைசெய்யவில்லை. ஓலா சர்வீஸ் செண்டர் செய்த சோதனையும் சரியாக இல்லாததால், அடிக்கடி பழுதாகியது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமான பொழுது இருந்த வரபேற்பு, தற்போது படிப்படியாக குறைந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஓலா நிறுவனம் ஸ்கூட்டர்களை திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறது. தொடர்ச்சியாக ஓலா தரமில்லாத வகையில் வாகனங்களை உற்பத்தி செய்திருப்பதாக குற்றச்சட்டு எழுந்துள்ளது.

இந்தியாவில் எதிர்ப்பை சந்திக்கும் Ola eScooter : அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்.. என்ன செய்யப்போகிறது ஓலா?

இதனால் ஓலா நிறுவனத்தின் மீது முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பலரும் கலத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் முதலீட்டார்கள் தங்கள் முதலீடுகளை திரும்ப பெறுவதற்காக வழிமுறைகளை ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் ஓலா நிறுவனம் அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி முன்னணி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்துக்கு ஏற்பட காரணம் என்ன?

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடிக்க அதில் உள்ள பேட்டரி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது, லித்தியம் அயன் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பேட்டரி அனைத்தும் சேதாரமோ அல்லது மின் கசிவு போன்ற காரணங்களால் தீப்பிடிக்கின்றன. ஒரு முறை தீ பிடித்துவிட்டால் இந்த லித்தியம் அயன் பேட்டரி அணைப்பது மிகவும் கடினம் எனக் கூறப்படுகிறது. மேலும் தண்ணீர் மூலம் தீயை அணைத்தால் பேட்டரி ஹைட்ரஜன் கேஸ் மற்றும் லித்தியம் ஹைட்ட்ராக்ஸைட் வாயு வெளியிடும். இந்த கேஸ் பெரும் தீப்பிடிக்கும் அபாயம் உள்ள கேஸ் எனக் சொல்லப்படுகிறது.

banner

Related Stories

Related Stories