இந்தியா

’ஜிப்மரில் வேலை வேணும்னா ரூ.17 லட்சம் வெட்டுங்க’ : போலிஸ் வலையில் பாஜக நிர்வாகி? - புதுவையில் பரபரப்பு!

ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக போலி பணி ஆணை தயார் செய்து ரூ.59 லட்சம் மோசடி செய்த நபரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

’ஜிப்மரில் வேலை வேணும்னா ரூ.17 லட்சம் வெட்டுங்க’ : போலிஸ் வலையில் பாஜக நிர்வாகி? - புதுவையில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (69). கம்பன் நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது நண்பரும் பாஜக பிரமுகருமான செல்வத்திடம் தனது மகன் பட்டபடிப்பு முடித்துவிட்டு தன்னுடன் கடையில் வேலை செய்து வருவதாக கூறியுள்ளார்.

அவருக்கு ஏதேனும் அரசு துறையில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என கூறியதை அடுத்து செல்வம், தனக்கு ஜிப்மர் இயக்குனரிடம் உதவியாளராக பணிபுரியும் மணிகண்டன் என்பரை தெரியும் என்று கூறி கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் மணிகண்டனை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதனையடுத்து ஜனவரி மாதம் பிரபாகரனிடம் மணிகண்டன் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 17 லட்சத்தை தனது வங்கி கணக்கின் மூலம் பெற்றுள்ளார். இதுமட்டுமன்றி பிரபாகரன் தனக்கு தெரிந்த சிலரையும் அறிமுகப்படுத்தி அவர்களிடமும் ஜிப்மரில் செவிலியர், வரவேற்பாளர், அட்டண்டர் உள்ளிட்ட பணிகளை மணிகண்டன் வாங்கி தருவார் என கூறி ரூபாய் 59 லட்சம் வரை பெற்று தந்துள்ளார்.

மணிகண்டனும் சிலருக்கு பணி ஆணையை அனுப்பியுள்ளார். பின்னர் போன் செய்து இன்னும் வேலை தயாராகவில்லை அதனால் இப்போது செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதில் சுரேஷ் என்பவர் மட்டும் ஜிப்மருக்கு சென்று தனது பணி ஆணையை காண்பித்துள்ளார்.

அப்போதுதான் அது போலியாக தயார் செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரபாகரன் ரெட்டியார்பாளயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலிஸார் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த மோசடியில் பிரபாகருக்கு, மணிகண்டனை அறிமுகம் செய்து வைத்த பாஜக பிரமுகர் செல்வத்திற்கு தொடர்பு உள்ளதா எனவும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories