இந்தியா

டெல்லியில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலி.. மீட்பு பணிகள் தீவிரம்!

டெல்லியில் ஏற்பட்ட கட்டட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலி.. மீட்பு பணிகள் தீவிரம்!
-
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெற்கு டெல்லி பகுதியில் உள்ள சத்ய நிகேதன் பகுதியில் உள்ள மூன்று அடுக்குமாடி கொண்ட கட்டடம் சீரமைக்கப்பட்டு வந்தது. இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இந்த விபத்தில், கட்டடத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த அனைத்து தொழிலாளர்களும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் இடிபாடுகளில் சிக்கித் தவித்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த மீட்புப் பணியில் இதுவரை 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள். மேலும் இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்துக்குள்ளான இந்த கட்டடம் ஆபத்தான நிலையில் இருப்பதாக கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஏற்கனவே நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதி காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories