இந்தியா

அதிக விவாதங்கள்... தனிநபர் மசோதாக்கள்... ராஜ்யசபாவில் அசத்திய தி.மு.க எம்.பிக்கள்!

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க எம்.பிக்கள் அதிகமான விவாதங்களில் பங்கேற்று இந்திய அளவில் முதன்மை பெற்றுள்ளனர்.

அதிக விவாதங்கள்... தனிநபர் மசோதாக்கள்... ராஜ்யசபாவில் அசத்திய தி.மு.க எம்.பிக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜன.,31ஆம் தேதி முதல், பிப்., 11 வரை நடந்தது. பிப்., 1ல், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு, கடந்த மாதம் 14ல் துவங்கியது. ஏப்., 8 வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தொடர் திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாக, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தொடரில், ராஜ்யசபாவில் 99.8% அலுவல்கள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நடந்து முடிந்த கூட்டத்தொடரில் எம்.பிக்களின் செயல்பாடு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க எம்.பிக்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டதாகத் தெரியவருகிறது.

தி.மு.க சார்பில் கடந்தாண்டு மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எம்.அப்துல்லா 162 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 49 கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்தக் கூட்டத்தொடரில் இவரது வருகை 85% ஆகும்.

தி.மு.க மாநிலங்களவை எம்.பி கனிமொழி என்.வி.என்.சோமு 163 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். இதுவரை 87 கேள்விகளை முன்வைத்துள்ளார். இந்தக் கூட்டத்தொடரில் இவரது வருகை 74% ஆகும்.

தி.மு.க எம்.பி திருச்சி சிவா இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 96% வருகை புரிந்துள்ளார். பி.வில்சன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories