இந்தியா

“ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 6 பேர் உடல் கருகி பலி” : ஆந்திராவில் நடந்த சோகம் !

ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

“ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 6 பேர் உடல் கருகி பலி” : ஆந்திராவில் நடந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலம், அக்கிரெட்டிகுளம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட ரசாயன கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து எற்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைக்குள் இருந்த பணியாளர்கள் பலரும் தீயில் சிக்கியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கியிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டடு வந்தனர். இருப்பினும் தீயில் கருகி 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெகன்மோன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories