இந்தியா

இந்தியாவிலும் நுழைந்தது புதிய வகை XE வைரஸ்... மும்பையில் ஒருவருக்கு உறுதியானதால் மீண்டும் அச்சம்!

கொரோனாவின் புதிய வேரியண்ட் ஆன XE தொற்று முதன் முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் நுழைந்தது புதிய வகை XE வைரஸ்... மும்பையில் ஒருவருக்கு உறுதியானதால் மீண்டும் அச்சம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனாவின் புதிய வேரியண்ட் ஆன ஒமைக்ரான் XE தொற்று முதன் முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா கடந்த 2 ஆண்டுகளாக பல அலைகளைாக பரவியது. உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவல் சமீபமாக குறைந்துவந்த நிலையில், புதிய வேரியண்ட் ஆன XE தொற்று பிரிட்டனை உலுக்கி வருகிறது.

ஜனவரி 19-ம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக இந்த புதிய மாறுபட்ட வேரியண்ட் கண்டறியப்பட்டது இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் தொடர்ந்து பலருக்கும் இந்த வெரியண்ட் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் புதிய வேரியண்ட் ஆன `ஒமைக்ரான் XE’, இந்தியாவில் முதன்முதலாக மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து BMC ஆணையர் இக்பால் சிங் வெளியிட்டுள்ள தகவலின்படி, “சுமார் 376 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில், ஒருவருக்கு இந்தத் தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் 228 பேருக்கு ஒமைக்ரான் இருக்கலாம் என தெரிகிறது. மற்றவர்களில் Kappa வேரியண்ட் ஒருவருக்கும், XE வேரியண்ட் ஒருவருக்கும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த XE வேரியண்ட் ஒமைக்ரானை விடவும் 10 மடங்கு வேகமாக பரவக்கூடிய தன்மையுடையது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த XE கொரோனா வேரியண்ட், ஒமைக்ரானின் இரு முக்கிய வேரியண்ட்களான பி.ஏ.1 மற்றும் பி.ஏ.2 ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வேரியண்ட்கள் எனக் கருதப்படுகிறது.

இந்த வகை வேரியண்ட் இங்கிலாந்து, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் அடி எடுத்து வைத்துள்ளது கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories