Corona Virus

“ஒமைக்ரான் தொற்றிலிருந்து நான் கற்றுக்கொண்ட 5 பாடங்கள்” : புகழ்பெற்ற மருத்துவர் பகிர்ந்துகொண்டது என்ன?

புகழ்பெற்ற அமெரிக்க மருத்துவர் பாஹீம் யூனுஸ் தனக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து தான் கற்றுக்கொண்ட 5 பாடங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

“ஒமைக்ரான் தொற்றிலிருந்து நான் கற்றுக்கொண்ட 5 பாடங்கள்” : புகழ்பெற்ற மருத்துவர் பகிர்ந்துகொண்டது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32.38 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 46 ஆயிரத்து 541 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் தொற்று தற்போது உலகம் முழுவதும் வெகுவாகப் பரவி வருவதால் பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்கள் துறை தலைவரான மருத்துவர் பாஹீம் யூனுஸ் தனக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அந்த அனுபவத்திலிருந்து அவர் கற்றுக்கொண்ட 5 பாடங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

“ஒமைக்ரான் தொற்றிலிருந்து நான் கற்றுக்கொண்ட 5 பாடங்கள்” : புகழ்பெற்ற மருத்துவர் பகிர்ந்துகொண்டது என்ன?

அதில், “2 ஆண்டுகளில் 1000 முறைகளுக்கு மேல் கொரோனா நோயாளிகளைச் சுற்றி வந்திருக்கிறேன். முகக்கவசங்கள் மற்றும் கவச உடைகளினால் நோய்த்தொற்று ஏற்படவில்லை. ஆனால் தற்போது முகக்கவசமின்றி குடும்ப நிகழ்வில் பங்கேற்றபோது கொரோனா என்னைப் பற்றிக்கொண்டது. எனவே கட்டாயம் முகக்கவசங்களை அணியுங்கள்.

தொற்று ஏற்பட்டு வென்டிலேட்டரில் உயிருக்கு போராடாமல், 5 நாட்களுக்குப் பின் முகக்கவசங்களுடன் நான் வேலைக்குத் திரும்பிவிட்டேன். எனது கதையை சமூக ஊடகங்களில் சொல்கிறேன். தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் அதன் வேலையைச் செய்துள்ளது.

எனக்கு மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள், ஸ்டெராய்டுகள் பாக்ஸ்லோவிட் போன்றவை தேவைப்படவில்லை. அறிகுறிக்கு தகுந்த சிகிச்சை போதுமானது. அதேசமயம் கடுமையான நோயாளிகளுக்கான நெறிமுறைகள் வேறாக இருக்கும்.

கொரோனா இருக்கிறதோ இல்லையோ, உங்கள் மரணத்தை பற்றி அடிக்கடி நினைத்துப் பாருங்கள். இது யாவற்றையும் சரியான வகையில் காண வைக்கும். தைரியமான, அர்த்தமுள்ள முடிவுகளை எடுப்போம். மந்தை நோய் எதிர்ப்பு சக்தி நல்லது. மந்தை மனநிலை மோசமானது.

பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளுங்கள், N95 முகக்கவசங்களை அணியுங்கள், அப்படியும் கொரோனா தொற்று ஏற்பட்டாலும், கவலை வேண்டாம் முழுமையாக குணமடைவீர்கள். நான் பங்கேற்ற குடும்ப நிகழ்ச்சி எனக்கு முக்கியமானது. அதனால் அந்த ரிஸ்க்கை எடுத்தேன். அறிவியலை முதலில் மதியுங்கள். பின்னர் மனது சொல்வதைச் செய்யுங்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories