இந்தியா

ஆந்திராவில் 3மாத குழந்தையை ரூ.70,000 முதல் 2.50 வரை விற்ற கும்பல் : தந்தை உட்பட 11 பேர் சிக்கியது எப்படி?

குழந்தையின் தந்தை மனோஜ் தொடங்கி அனைவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பெண் குழந்தை விற்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஆந்திராவில் 3மாத குழந்தையை ரூ.70,000 முதல் 2.50 வரை விற்ற கும்பல் : தந்தை உட்பட 11 பேர் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அந்த சிசுவை விற்க திட்டமிட்டு ஏழு முறை கைமாற்றிய சம்பவம் ஆந்திராவில் நடந்திருக்கிறது.

குண்டூரில் உள்ள மங்களகிரி பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவருக்கு 3வதாக பெண் குழந்தையே பிறந்திருக்கிறது. இதனை மனோஜ் தம்பதி அதிருப்தியில் இருந்ததால் 3வதாக பிறந்த பெண் குழந்தையை விற்றுவிடலாம் என இருவரும் முதலில் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

பிறகு மனோஜின் மனைவி மறுப்பு தெரிவித்திருக்கிறார். இருப்பினும் மனைவிக்கு தெரியாமல் குழந்தையை விற்கும் பணியில் மனோஜ் இறங்கியிருக்கிறார். அதன்படி, மூன்று மாத பெண் குழந்தையை நாகலட்சுமி என்ற பெண்ணின் உதவியோடு தெலங்கானாவின் நல்கொண்டாவைச் சேர்ந்த காயத்ரி என்பருக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு முதலில் மனோஜ் விற்றிருக்கிறார்.

அதன் பின்னர் காயத்ரி ஐதராபாத்தைச் சேர்ந்தவருக்கு 1.20 லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார். அந்த நபர் நூர்ஜஹான் என்பருக்கு 1.80 லட்சத்துக்கு கைமாற்றப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஐதராபாத்தின் நாராயணகூடாவைச் சேர்ந்த உமா தேவிக்கு 1.90 லட்சத்துக்கு குழந்தை விற்கப்பட்டிருக்கிறது.

இப்படியாக கைமாற்றப்பட்டு வந்த மனோஜின் குழந்தை கடைசியாக கோதாவரி மாவட்டம் ஏலூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற நபர் 2.50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்.

இதனிடையே தகவல் அறிந்த மனோஜின் மாமியார் அவரது மகளான ராணியுடன் சேர்ந்து மங்களகிரி போலிஸாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டதில் குழந்தையின் தந்தை மனோஜ் தொடங்கி அனைவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்குறிப்பிட்ட விற்பனை விவகாரம் தெரிய வந்திருக்கிறது.

அதன் பேரில் மனோஜ் உட்பட 11 பேரை கைது செய்த போலிஸார் விற்கப்பட்ட பெண் குழந்தையையும் மீட்டு தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories