இந்தியா

"தேர்தல் பிரச்சாரத்தில் விதிகளை மீறி பா.ஜ.கவுக்கு உதவிய Facebook" - மக்களவையில் சோனியா காந்தி காட்டம்!

சமூக ஊடகங்களிலிருந்து நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என மக்களவையில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

"தேர்தல் பிரச்சாரத்தில் விதிகளை மீறி பா.ஜ.கவுக்கு உதவிய Facebook" - மக்களவையில்  சோனியா காந்தி காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1-ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பூஜ்ஜிய நேரத்தில் மக்களவையில் பேசினார்.

அப்போது சோனியா காந்தி, "நமது ஜனநாயகத்திற்குள் சமூக ஊடகங்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்களை உலக அளவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிகள் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இந்த நிறுவனங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பை வழங்குவதில்லை. மேலும் ஃபேஸ்புக் தனது விதிமுறையை ஆளும் கட்சிக்காக மீறியதாகச் சர்வதேச இதழில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் ஆளும் கட்சியின் துணையுடன் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் அப்பட்டமான செயலில் ஃபேஸ்புக் ஈடுபட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒன்று. போலி விளம்பரங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடம் வெறுப்பூட்டும் கருத்துகளை வெளியிட்டு லாபம் ஈட்டுகின்றன.

இது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. யார் ஆட்சியிலிருந்தாலும் நமது ஜனநாயகத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories