இந்தியா

வன உரிமைச் சட்டம்: யாரும் எதிர்பார்க்காத கோரிக்கை - நாடாளுமன்றத்தில் ஆ.ராசா MP எழுப்பிய கேள்வி என்ன?

மார்ச் 16- 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வனத்துறை மற்றும் வனத்துறை அதிகரிகளுக்கு பயிற்சியளிக்க சிறப்புத் திட்டங்கள் உள்ளனவா? என ஆ.இராசா கேள்வி எழுப்பினார்.

வன உரிமைச் சட்டம்: யாரும் எதிர்பார்க்காத கோரிக்கை - நாடாளுமன்றத்தில் ஆ.ராசா MP எழுப்பிய கேள்வி என்ன?
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுடெல்லி, மார்ச் 16- 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வனத்துறை மற்றும் வனத்துறை அதிகரிகளுக்கு பயிற்சியளிக்க சிறப்புத் திட்டங்கள் உள்ளனவா? என்று முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மக்களவைக் கழகக் கொறடாவுமான ஆ.இராசா கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து ஒன்றிய முன்னாள் அமைச்சரும் கழகக் கொறடாவுமான ஆ.இராசா 14.3.2022 அன்று மக்களவையில் எழுப்பிய கேள்வி வருமாறு:-

பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட கேள்விக்கு பதில் அளிப்பாரா?

(அ) 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த ஒவ்வொரு மாநிலத்திற்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா அல்லது வன மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க சிறப்புத் திட்டங்கள் வைத்துள்ளதா?

(ஆ) அவ்வாறானால் அத்தகைய திட்டங்கள், அத்திட்டங்கள் தொடங்கப்பட்ட தேதிகள், 2020 ஆம் ஆண்டில் அத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டவிதம் பற்றி தெரிவிக்கவும்.

(இ) வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளில் பொறுப்பான அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி பற்றிய விபரங்களைத் தெரிவிக்கவும். இவ்வாறு ஒன்றிய முன்னாள் அமைச்சரும், கழகக் கொறடாவுமான ஆ.இராசா கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கு, பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் திருமதி ரேணுகா சிங் சருதா அளித்த பதில் வருமாறு:-

(அ) மற்றும் (ஆ) பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் “பழங்குடியினர் ஆராய்ச்சி கல்வி நிலையங்களுக்கு ஆதரவு அளிக்கும் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு 2017-18 முதல் நிதி உதவி களை வழங்கி வருகிறது. வன உரிமைச் சட்டம் அமல்படுத்தல் உள்ளிட்ட இந்த நிதி பழங்குடியினர் ஆராய்ச்சி கல்வி நிலையங்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் பழங்குடியினர் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், பயிற்சி மற்றும் ஆற்றல் உருவாக்கும் திட்டங்களுக்காக வழங்கப்படுகிறது.

முன்னதாக இந்தத் திட்டம் “ஆராய்ச்சி மற்றும் பயிற்சி” என்ற பெயரில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து செயல்படுத்தப்பட்டு வந்தது.

(இ) பயிற்சி திட்டங்களின் விபரங்கள் / 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளில் பழங்குடியினர் ஆராய்ச்சி கல்வி நிலையங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வன உரிமைச்சட்டப் பணிப் பயிற்சிகள் (ஒர்க்ஷாப்புகள்) மாநில வாரியாக இணைப்பு ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஒன்றில் மத்தியப் பிரதேசம், மணிப்பூர், ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு 2018-19 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு பற்றியும், மணிப்பூர், ஒடிசா மாநிலத்திற்கு 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளுக்கான ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதமிழ்நாட்டுக்கு வன உரிமைச் சட்டம் விழிப்புணர்வுத் திட்டம் பழங்குடியினர் நிறைந்த 16 மாவட்டங்களுக்கு ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது" என பதிலளித்தார்.

banner

Related Stories

Related Stories