இந்தியா

கிஃப்ட் பேரில் 2 லட்சம் கஞ்சா, போதை மாத்திரை: நேரில் சென்ற சுங்க அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

போலி முகவரியில் போதை பொருட்களை வரவழைத்த தெலுங்கானா,ஆந்திரா ஆசாமிகளுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் வலை வீச்சு.

கிஃப்ட் பேரில் 2 லட்சம் கஞ்சா, போதை மாத்திரை: நேரில் சென்ற சுங்க அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை வெளிநாட்டு தபால் மற்றும் பாா்சல்கள் அஞ்சலகத்திற்கு சரக்கு விமானத்தில் நெதா்லாந்து நாட்டிலிருந்து 2 பாா்சல்கள் வந்திருந்தன.

ஒரு பாா்சல் ஆந்திரா மாநிலம் விஜயவாடா முகவரிக்கும், மற்றொரு பாா்சல் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் முகவரிக்கும் வந்திருந்தன. வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த பாா்சல்களை பரிசோதித்துக் கொண்டிருந்த சுங்க அதிகாரிகளுக்கு அந்த 2 பாா்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அந்த பாா்சல்களில் பிறந்தநாள் பரிசுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சந்தேகத்தில் இரு பாா்சல்களையும் சுங்கத்துறையினா் பிரித்து பாா்த்து சோதித்தனா்.

கிஃப்ட் பேரில் 2 லட்சம் கஞ்சா, போதை மாத்திரை: நேரில் சென்ற சுங்க அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஒரு பாா்சலில் விலை உயா்ந்த 32 போதை மாத்திரைகள் இருந்தன. மற்றொரு பாா்சலில் பதப்படுத்தப்பட்ட உயா்ரக கஞ்சா போதைப்பொருள் 419 கிராம் இருந்தது. இரு பாா்சல்களில் இருந்த போதைப்பொருட்களின் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ.2 லட்சம்.

இதையடுத்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், போதை பொருட்கள் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனா். சுங்கத்துறையினரின் தனிப்படையினா், ஹைதராபாத், விஜயவாடா நகா்களுக்கு விசாரணைக்காக சென்றனா்.

ஆனால் பாா்சல்களில் இருந்த முகவரிகள் போலியானவைகள் என்று தெரியவந்தது. இதையடுத்து போலி முகவரியில் வெளிநாட்டிலிருந்து போதை பொருட்களை வரவழைத்த தெலுங்கானா, ஆந்திரா ஆசாமிகளை தேடி வருகின்றனா்.

banner

Related Stories

Related Stories