இந்தியா

சிறுமிகளை மிரட்டி பாலியல் தொழில்: 3 முதியவர்கள் உட்பட 4 பேருக்கு காப்பு; மங்களூரு போலிஸ் பகீர் ரிப்போர்ட்

அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் ஈடுபட்ட நால்வரை மங்களூரு போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.

சிறுமிகளை மிரட்டி பாலியல் தொழில்: 3 முதியவர்கள் உட்பட 4 பேருக்கு காப்பு; மங்களூரு போலிஸ் பகீர் ரிப்போர்ட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் பாண்டேஷ்வர் மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்டாவர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாகவும் அதற்காக கல்லூரி மாணவிகளை பயன்படுத்தி வருவதாகவும் போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனையடுத்து பாதிக்கப்பட்ட 17 வயது கல்லூரி மாணவி கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மங்களூரு மாநகர மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி அட்டாவர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பை மாநகர போலிசார் சோதனையிட்ட போது அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து 3 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் மேலும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலிஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் இதில் சம்பந்தப்பட்ட நான்கு நபர்களை இன்றைய தினம் போலிஸார் கைது செய்துள்ளதாக மங்களூர் மாநகர போலிஸ் கமிஷனர் சசிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கும்பலாவை சேர்ந்த இஸ்மாயில் 41, குலசேகர் பகுதியை சேர்ந்த லியோனர்டு (62), வியாஸ்நகரை சேர்ந்த ரஷீது சாஹீப் (74), கத்ரியை சேர்ந்த முகம்மது அலி (74) என தெரியவந்தது. இதில் மேலும் சிலர் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களையும் போலிஸார் கண்டுபிடித்து கைது செய்து விசாரனை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபட்டது அவர்களுக்கு துணையாக மேலும் சில மாணவிகளை அவர்கள் மூலம் வரவழைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது. தற்போது போலிஸார் வலையில் இதுவரை 14 நபர்கள் சிக்கியுள்ளனர் என மாநகர போலிஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories