தமிழ்நாடு

”மனைவி திட்டியதால் சோகம்; தூக்கில் தொங்கிய கணவன்” - ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பரிதாப நிகழ்வு!

”மனைவி திட்டியதால் சோகம்; தூக்கில் தொங்கிய கணவன்” - ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பரிதாப நிகழ்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கணவன் மனைவி இடையே நிலவும் சண்டை சச்சரவு காலப்போக்கில் உயிரையே காவு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவது அண்மை நாட்களாக அதிகரித்து வருகிறது.

அதன்படி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கிருஷ்ணா என்பவர் தனது மனைவி திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ணா (22) என்ற இளைஞன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தனது மனைவியுடன் சோகண்டி பகுதியில் வசித்து வந்தார்.

இப்படி இருக்கையில் நேற்று முன் தினம் செல்போனில் கிருஷ்ணா அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததை அவரது மனைவி கண்டித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியிருக்கிறது.

இதனையடுத்து மனைவி வெளியே சென்ற நேரம் பார்த்து வீட்டில் கிருஷ்ணா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார். பின்னர் வீடு திரும்பியதும் கிருஷ்ணா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்ட மனைவி அதிர்ச்சியில் அலறியிருக்கிறார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கிருஷ்ணாவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். இது தொடர்பாக விவரமறிந்த போலிஸார் கிருஷ்ணாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலதிக விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories